Hot News
Home » செய்திகள் » இலங்கை தொடர்பான நிலைப்பாடு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்!- சல்மான் குர்ஸித்

இலங்கை தொடர்பான நிலைப்பாடு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்!- சல்மான் குர்ஸித்

இலகைக்கு எதிராக அமெரிக்க சார்பு நாடுகள் ஜெனீவாவில் கொண்டு வரவுள்ள பிரேரணையின் போது இந்தியா மேற்கொள்ளும் தீர்மானம், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தற்போது தேர்தல் களத்தில் கவனம் செலுத்துகிறது. எனவே எல்லா விடயங்களையும் மக்களுக்கு தெளிவுப்படுத்திக்கொண்டிருக்க வாய்ப்பில்லை.

இதனால் சில வேளையில் நல்ல உறவுகளும் சிலவேளையில் உறவுகளில் பிரச்சினைகளும் ஏற்படலாம் என்று குர்ஸி;த் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து சென்று செய்தியாளர்களிடம் அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.

அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டு வரவுள்ள பிரேரணை தொடர்பில் இலங்கை புரிந்துணர்வை கொண்டிருக்கவேண்டும்.

மனித உரிமைகள் விடயத்தில் சர்வதேசத்தின் கவனத்தில் இருந்து இலங்கை தூர விலகிச்செல்ல முடியாது.

இலங்கையில் அதிகமான உணர்வுகள் வெளிக்காட்டப்படுகின்ற நிலையில் சர்வதேசம் அதிகமாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் குர்ஸித் தெரிவித்தார்.

எனவே இலங்கையை பொறுத்தவரை தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வரவேண்டியது அவசியம் என்றும் குர்ஸி;த் கூறினார்.

இலங்கை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படக்கூடாது. 30 வருட பிரச்சினையை ஒருநாளில் தீர்க்கமுடியாது. எனவே இலங்கை சர்வதேசத்தை திருப்திபடுத்த வேண்டும்.

சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதன் மூலம் இலங்கையால் நல்லிணகத்துக்கான காலஅவகாசத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் குhஸித் கோரிக்கை விடுத்தார்.

TELO Media Team 1