Hot News
Home » செய்திகள் » கேப்பாபிலவு மக்களுக்கு தமிழ் தலைவர்களின் நிவாரண உதவி

கேப்பாபிலவு மக்களுக்கு தமிழ் தலைவர்களின் நிவாரண உதவி

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசம் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருப்பதனால், தேசிய பாதுகாப்பை முன்னிட்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை சீனியாமோட்டையில் குடியேற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.அந்த மக்களுக்காக நிரந்தர வீடுகள், தொழில் வாய்ப்புக்கள் என்பவற்றை எற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமைப்போன்று அரசாங்கம் தங்களை சீனியாமோட்டையில் தற்காலிக முகாமில் குடியமர்த்தியிருப்பதாகவே அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.இப்போது அங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து, பொதுவான குடிநீர் வசதிகளுடன் நிரந்தர வீடுகள், தொழில்வாய்ப்புக்கள் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.தமது சொந்தக் காணிகளுக்குச் செல்வதையே தாங்கள் விரும்புவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.சீனியாமோட்டையில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.எனினும், அவை அவர்களுக்குப் போதாது என்று தாங்களும் இன்று சனிக்கிழமை நிவாரணப் பொருட்களை வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.வவுனியா வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் உதவியுடன் இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் இந்த நிவாரண விநியோக நிகழ்வில் கலந்துகொண்டார்.சீனியாமோட்டையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகள் மீண்டும் கிடைக்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று இங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.சீனியாமோட்டையில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் இராணுவத்தின் காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தவில்லை.

TELO Admin