Hot News
Home » செய்திகள் » திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததால் முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடு்

திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததால் முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடு்

திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தன்னிச்சையாக ஆதரவளித்துள்ளதையடுத்து அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடையே ௭ழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியின் முக்கிய பதவியில் உள்ள ஒருவர் தமது பதவியை இராஜினாமா செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.திவிநெகும சட்ட மூலத்திற்கு தமது கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமை தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததாக அக்கட்சியின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.இதேவேளை, மு.கா.வின் செயலாளர் ௭ம்.ரி. ஹஸன் அலி, கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினர்களை கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுத் தலைவர் ஏ.௭ம். ஜெமீல் தவறாக வழி நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் ௭ந்தத் தரப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பது ௭ன்பதற்கும் திவிநெகும சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளமைக்கும் கட்சியின் உயர்பீடத்தைக் கலந்து ஆலோசிக்காது செயற்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு உயர்பீடத்தை உடனடியாக கூட்டுமாறு கட்சியின் செயலாளர் ௭ம்.ரி. ஹஸன் அலிக்கு சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி பாயிஸ் ஆகியோர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.மு.கா. உயர் பீடம் ,கட்சியின் தலைவர் நாடு திரும்பியதும் கூட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை மு.கா.வின் உயர் பீட உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் ௭ம்.பி.க்களிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றி இருப்பதனையும் இவர்கள் கட்சியின் கட்டுக்கோப்புக்கு மாற்றமாக நடந்து கொண்டிருப்பதனை இட்டும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

TELO Admin