Hot News
Home » செய்திகள் » கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் அரசியல் தலைவர்கள் என பலர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன நேற்றைய தினம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இன்றைய ஆர்ப்பாட்டம் மற்றும் பணிபகிஷ்கரிப்பு என்பவற்றினால் நீதிமன்ற செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டிருந்ததுடன், இன்று நடைபெறவிருந்த வழக்கு விசாரணைகள் பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டன அத்துடன் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், நீதிமன்றக் கட்டிடத்தைச் சுற்றி கறுப்பு துணி கட்டப்பட்டிருந்தன.இதன்போது நீதித்துறையில் அரசியல் மற்றும் ஏனைய சக்திகளின் தலையீடு, நீதித்துறை மீதான அழுத்தம், அச்சுறுத்தல் குறித்த பதாதைகளையும், ஆர்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.அத்துடன் நீதிச்சேவை மரணித்து விட்டதனை பிரதிபலிக்கும் வகையில் சவப்பெட்டியினையும், மலர் வளையத்தினையும் சுமந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்னறனர்.பின்னர் நீதிமன்றக் கட்டித் தொகுதி வீதியில் அதற்கு எரியூட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

TELO Admin