Hot News
Home » செய்திகள் » காத்தான்குடியில் அசாத்சாலி பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து

காத்தான்குடியில் அசாத்சாலி பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து

கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி காத்தான்குடி கடற்க­ரை­யில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை உரை­யாற்ற விருந்த கூட்டம் சிலரினால் ­குழ­ப்­­ப­ப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிலைவரம் மற்றும் கல்வி ஊக்குவிப்பு தொடர்பாகவும் காத்­தான்குடி கடற்கரையிலுள்ள வளவொன்றில் கூட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியி­ரு­ந்தது. அந்த கூட்டத்தில் கொழும்பு மாநகர சபை முன்னாள் மேயர் அசாத்சாலி விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார். கூட்டம் 4.30 மணிக்கு ஆரம்பமாக இரு­ந்த வேளை கூட்டம் நடைபெறும் இட­த்­தி­ற்கு வந்த சிலர் கூட்டத்தை குழப்­பியு­ள்­ள­னர். அங்கு போடப்பட்டிருந்த ஒரு சில கதிரைகளும் சேதப்படுத்­தப்ப­ட்டு­ள்­ளன. இதன் போது கூட்ட ஏற்பாட்டாளர்கள் காத்­தான்குடி பொலிசாருக்கு தெரி­யப்படு­த்­திய­தையடுத்து அங்கு விரைந்த காத்­தான்குடி பொலிசார் நிலைமையை கட்­டுப்­பா­ட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து இங்கு நடைபெறவிருந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது. இது அரசியல் கூட்டம் ௭ன்பதால் முறை­யாக பொலிஸ் நிலையத்தில் கூட்ட­த்திற்­கான அனுமதி பெற்றிருக்கவேண்டும் அவ்வாறான ௭ந்த அனுமதியையும் கூட்ட ஏற்பாட்டாளர்கள் பெற்றிருக்க வில்லை ௭ன காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில்,கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் ௭னக்காக வாக்களித்த மக்களை சந்திப்பதற்காகவும் கல்வி வியடம் தொடர்பாகவும் கல்விக்காக உதவுவது தொடர்பான கலந்துரையாடல் அத்தோடு சில வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்ப­ட்டி­ருந்தது.கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்த வேளை அந்த பிரதேசத்தை சேர்ந்த ஆளும் கட்­சியின் அரசியல் வாதியொருவருடைய ஆதரவாளர்கள் ௭ன்று கூறப்படுகின்ற 25க்கு மேற்பட்டோர் அங்கு வருகை தந்து கூட்ட­த்தி­ற்கு வருகை தந்தோரை அச்சு­றுத்­திய­து­டன் வெளியில் செல்லுமாறும் கூறியு­ள்­ளனர். இதன் போது கூட்டத்திற்காக வருகை தந்­தோ­ரையும் அங்கு வரவிடாமல் குறித்த அர­சி­யல் வாதியின் ஆட்கள் தடுத்துள்ளனர். அத்­தோடு அங்கு போடப்பட்டிருந்த கதி­ரை­­­களையும் உடைத்துள்ளனர். இதனால் கதி­ரை­கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களையும் இவ­­ர்­கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் அசாத் சாலி இதில் மேலும் தெரிவித்தார்.

TELO Admin