Hot News
Home » செய்திகள் » அவசரகாலச் சட்டத்தினால் வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகம் பாதிப்பு: செல்வம் அடைக்கலநாதன்

அவசரகாலச் சட்டத்தினால் வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகம் பாதிப்பு: செல்வம் அடைக்கலநாதன்

அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய எந்தவிதமான அவசியமும் கிடையாது. அரசாங்கம் கூறுவதனைப் போன்று மக்களுக்கு பிரச்சினைகள் கிடையாது.எதனால் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது? இந்த சட்டத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.ஜீவனோபாயத் தொழிலான மீன்பிடியில் ஈடுபடுவதற்கு பத்து அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் கோரியுள்ளார்.இதேவேளை, அவசரகாலச் சட்ட நீடிப்பினால் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் நாட்டின் அனைத்து மக்களினதும் நோக்கம் நிறைவேறியுள்ளது என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

TELO Admin