Hot News
Home » செய்திகள் » எங்களுடன் இணைந்து போட்டியிடுங்கள் அல்லது தனித்து போட்டியிடுங்கள் அரசுக்கு முண்டு கொடுத்தால் அது ஆபத்தாக முடியும் முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை

எங்களுடன் இணைந்து போட்டியிடுங்கள் அல்லது தனித்து போட்டியிடுங்கள் அரசுக்கு முண்டு கொடுத்தால் அது ஆபத்தாக முடியும் முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட வேண்டும் இல்லையேல் தனித்துப் போட்டியிட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன் இணைந்து போட்டியிடுமாறு அழைக்க வேண்டியது தங்களின் கடமையெனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினமும் பாராளுமன்றத்தில் மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன், பி.அரியநேத்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், பொது செயலாளர் ஹசன்அலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திசாம் காரியப்பர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசுகையில்; அரசியல் தீர்வு தனித்து தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, மாறாக தமிழ் பேசும் மக்களுக்கானது. அரசியல் தீர்வு கிடைக்கும் எனினும் என்ன ரீதியில் கிடைக்குமென தெரியாது. இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காதுள்ளது. குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதானது. அதற்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றுவதாக அமைந்து விடும் இது வரலாற்று துரோகமாக பொய் முடியும் நீங்கள் அரசாங்கத்துடன் இருக்கின்ற போதும் நீங்கள் நினைப்பதை அடைய முடிந்ததில்லை. எனவே எம்முடன் இணைந்து போட்டியிட வேண்டும். இல்லையேல் தனித்து போட்டியிட வேண்டும். எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு முட்டுக்கொடுக்க வேண்டாமென கேட்கின்றோம். எமக்கு எம்முடன் போட்டியிடுமாறு கேட்க வேண்டிய ககடமையும் உரிமையும் உள்ளது. எதிர்காலத்தில் எம்மை அழைக்கவில்லையென குற்றம்சாட்டக் கூடாöத்பதற்காகவே இந்த அழைப்பை விடுக்கின்றேனென பேசியதாக பேச்சில் ஈடுபட்ட வட்டாரங்கள் தெரிவித்தார்.

TELO Admin