Hot News
Home » செய்திகள் » வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காக இலங்கையை சீனா பயன்படுத்தி வருகின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காக இலங்கையை சீனா பயன்படுத்தி வருகின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கான களமாக இலங்கையை சீனா பயன்படுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.ஐரோப்பாவிற்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதன் மூலம் வரி செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால், இலங்கையிலிருந்து பொருட்களை சீனா ஏற்றுமதி செய்வதாகத் தெரிவித்துள்ளது.இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சைக்கிள்களுக்கு குறைந்தளவு வரியே அறவீடு செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக சீனா இலங்கையிலிருந்து சைக்கிள்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதரத்திற்கு எழுத்து மூல முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இலங்கை, மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் டுயுனீஷியா போன்ற நாடுகளைப் பயன்படுத்தி சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றதா என்பது பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைகளை நடாத்த சில மாத காலம் செல்லும் எனவும், அதுவரையில் ஏற்பட்ட நட்டம் பற்றி கருத்து வெளியிட முடியாது எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.

TELO Admin