Hot News
Home » செய்திகள் » தம்புள்ள புனித பிரதேசத்திற்குள் வாழும் மக்களை வெளியேறும்படி உத்தரவு

தம்புள்ள புனித பிரதேசத்திற்குள் வாழும் மக்களை வெளியேறும்படி உத்தரவு

தம்புள்ள ‘புனித பிரதேசத்தில்’ வாழும் மக்கள் அடுத்த மாத இறுதிக்குள் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தம்புள்ள புனித பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது வாழிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என கட்டளையிடப்பட்டு, பொது மக்களிடம் துண்டறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இத்துண்டறிக்கையை நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைவாக தம்புள்ள புனித பிரதேசம் சிறிலங்கா அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகுமென இவ்வாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட துண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புனித பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு இன்னும் இரு வாரங்களில் கந்தலாம வீதியருகில் வேறு நிலங்கள் வழங்கப்படும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தம்புள்ள புனித பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லீம் பள்ளிவாசலை பௌத்த காடையர் குழு ஒன்று தாக்கியமை மற்றும் அங்கு வாழும் இந்துக்கள் அச்சுறுத்தப்பட்டமை ஆகிய இரு சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. இப்புனித பிரதேசமானது தம்புள்ள விகாரையின் அதிகாரத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கதே.

TELO Admin