Hot News
Home » செய்திகள் » மனநிலை பாதிக்கப்பட்ட துமிந்தவுக்கு எவ்வாறு நாடாளுமன்றில் விடுமுறை வழங்க முடியும்?!- ஹிருணிகா

மனநிலை பாதிக்கப்பட்ட துமிந்தவுக்கு எவ்வாறு நாடாளுமன்றில் விடுமுறை வழங்க முடியும்?!- ஹிருணிகா

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எவ்வாறு விடுமுறை வழங்க முடியுமென கேள்வியெழுப்பியுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விடுமுறை பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனது தந்தை கொல்லப்பட்டு ஒருவருடமாகிவிட்டன. அதே ஹிருணிக்காவே இப்போதும்; உங்கள் முன் பேசுகின்றேன். எனது தந்தைக்கு நீதி கிடைக்கும்வரை நான் தொடர்ந்து போராடுவேன்’ எனவும் அவர் கூறினார்.தடைகளிருப்பினும் தான் தொடர்ந்து பலமாக இருப்பேனென வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் கூறினார்.எங்களுடன் இருந்த அனைவருக்கும் என்னை கீழே தள்ள முயன்றவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். என்னை கீழே தள்ளுவதற்கு முயன்றவர்களினால்தான் நான் தொடர்ந்து போராடுகின்றேன்’ எனவும் அவர் கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எவ்வாறு விடுமுறை வழங்க முடியுமெனவும் அவர் கேள்வியெழுப்பினார்.மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விடுமுறை பெறமுடியும்? இறுதியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது துமிந்த சில்வாவின் சார்பில் ஆஜரான சட்டவுரைஞர்கள், எக்ஸ் – கதிர் படத்தைக் காட்டி இவருக்கு கடுமையாக மூளை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவரை குணப்படுத்தமுடியாதெனவும் கூறினர்.எவ்வாறாயினும் அவருக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்படுகின்றது. இது எவ்வாறு நடைபெறுகின்றதென என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.நடப்பவற்றை பார்த்தால் அடுத்த 10 வருடங்களுக்கு இவர் நாடாளுமன்றத்தில் விடுமுறையைப் பெற்றுக்கொள்ளலாமெனவும் எண்ணத் தோன்றுகின்றது’ எனவும் அவர் கூறினார்.

TELO Admin