Hot News
Home » செய்திகள் » சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய், காணாமல் போனவர்கள் எங்கே? – யாழில் நடைபெற்ற உரிமைக்கான முழக்கம்

சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய், காணாமல் போனவர்கள் எங்கே? – யாழில் நடைபெற்ற உரிமைக்கான முழக்கம்

தமிழர்களின் வாழ்வியல் பூமியை இராணுவம் ஆக்கிரமித்து அதை சுவிகரித்துள்ளமையைக் கண்டித்தும் யாழ்.நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப. வசந்தகுமார் தாக்கப்பட்டதை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் யாழ்.பஸ் நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.இந்த ஆர்பாட்டத்தில் எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வடக்கை விட்டு வெளியேறு, எங்களை நிம்மதியாக வாழ விடு, எமது சுயஉரிமையுடன் எங்களை வாழ விடு, நாங்கள் எங்கள் வீடுகளுக்கு போக இராணுவமே வெளியேறு, எங்களை அடிமையாக வைத்திருக்க நினைக்காதே, எங்கள் வாழ்வியல் உரிமை எமக்கு வேண்டும், சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய், காணாமல் போணவர்கள் எங்கே? என்ற உரிமை முழக்கத்துடன் யாழில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சுமார் ஒரு மணிநோரம் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ஈ.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், செலமேன் சிறில், மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ் உணர்வாளர்கள் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டம் நடைபெற்ற பகுதியைச் சூழ இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

TELO Admin