Hot News
Home » செய்திகள் » வட, கிழக்கில் இராணுவமயமாக்கல்: சீனாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறைப்பாடு!

வட, கிழக்கில் இராணுவமயமாக்கல்: சீனாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறைப்பாடு!

இலங்கைக்கு பாரியளவில் நிதியளிக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவிற்கும் சீன தூதுவர் வூ ஜியங்கோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, வட மாகாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் இன்று காணப்படுகின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத்திற்கு பாரியளவில் நிதியுதவியளிக்கும் சீனாவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி தெரிவித்தார்.‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இச்சந்திப்பின் போது சீன தூதுவருக்கு விளக்கமளி;க்கப்பட்டது. அத்துடன் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு சீனா தொடர்சியாக வழங்கி வருகின்ற உதவிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது’ என அவர் குறிப்பிட்டார்.இந்த பிரச்சினைகளை இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கான சிறந்த நிலையில் இலங்கையின் முக்கிய நிதியுதவியாளரான சீனாவினால் முடியும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்வு காண முடியும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது இந்தியாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

TELO Admin