இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பணியாளர் ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி மேல் நீதிமன்றம் அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி அஜய் வர்மாவின் தகவல்படி, நிறுவனப் பணியாளர் ஒருவரை துன்புறுத்தியது தொடர்பாக தொழில்துறை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரவை பிறப்பித்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்டவருக்கு ஊதியம் மற்றும் அதன் விளைவான சலுகைகள் எதையும் வழங்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் டெல்லி மேல் நீதிமன்றம், விமான நிறுவனம் தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதியன்று விசாரணைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.