Hot News
Home » செய்திகள் » 1983 கறுப்பு ஜூலை – அரசியல் கைதிகள் படுகொலைக்கு பின் – இன்றும் தொடரும் படுகொலை:பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

1983 கறுப்பு ஜூலை – அரசியல் கைதிகள் படுகொலைக்கு பின் – இன்றும் தொடரும் படுகொலை:பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

1983 கறுப்பு ஜூலை அன்று அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணியை, தங்கதுரை, ஜெகன் ஆகியோரை சிறையில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலைசெய்தார்கள் சிங்கள ராணுவ காடையர்கள், இன்று இருபத்தி ஒன்பது வருடம் கழித்து வவுனியா சிறையில் எல்லோராலும் மறக்கப்பட்ட நிலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து, இழிவுபடுத்தி, சிங்களவன் என்ற இறுமாப்புடன் இந்த தமிழ் கைதிகளை அடித்து, சித்திரவதை செய்து நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியை கொன்றிருக்கிறது சிங்கள ராணுவம்.

இந்த படுகொலையை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, சிறி லங்காவின் சிறையில் விசாரணைகள் இன்றி வாழும் பெயர்கள் உள்ள, பெயர்கள் அற்றவர்களாக வாழும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையை சர்வதேசத்தின் பார்வைக்கு பலதடவை Amnesty International என்ற அரசு சார்பற்ற ஸ்தாபனம் எடுத்து செண்டிருந்த நேரத்தில், இன்று சிறி லங்கா ராணுவத்தால் வவுனியாவில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகளை அனுராதபுரத்திற்கு எடுத்துச்சென்று தாக்கப்பட்டு அதில் ஒருவர் இறக்கும் அளவிற்கு தாக்கப்பட்டது, அதில் சர்வதேசத்தின் அமைதி பல கேள்விகளை எழுப்புகிறது.

Amnesty International சென்ற வருடம் இந்த விடயமாக ஒரு அறிகையை சமர்பித்ததொடு சென்ற வருடமும், இந்த வருடமும் உலக அரசியல் கைதிகள் தினத்தையோடி (ஜூன் 20) நடந்த கருத்தரங்கில் பிரான்சில் பல அரசியல் கட்சிகள், அரசு சார்பற்ற மனிதநேய அமைப்புகள் ஊடாக பிரான்சு அரசிடமும், ஐரோப்பிய பாராளுமன்ற சட்ட வகுப்பாலர்களிடமும் எடுத்து சென்றிருந்தோம்.

ஆனால் இந்த நடவேடிகைகள் மட்டும் இந்த சிறைக்கைதிகளை பாதுகாக்க, அல்லது அவர்களை விடுதலை செய்ய போதாது என்பதை நாம் உணர்கிறோம்.

தமிழ் மக்களின் நில அக்கிகரிப்பு, தமிழ் மக்களை சுயவாழ்வு முறைக்கு வராமல் தடுப்பது என்பது சிங்கள அரசால் வரையறுக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறையில் நடந்துகொண்டிருக்கிறது.

தாயகத்தில் நடைபெற்றுகொண்டிருக்கும் படுகொலைகள், நில ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக நடைபெறும் கலாச்சார அழிப்புகளை சர்வதேசம் முன் கொண்டு செல்லவேண்டிய மிக முக்கியம். இந்த அடிப்படையில் பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவை முள்ளி வாய்கால் பின் முன்று வருடமாக வாரம் தோறும் பிரான்ஸ் பாராளமன்றம் கூடும் போது தாயகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மனிதவுரிமை மீறல்களை பிரான்சு நாடாளுமன்றதிட்கு தெரிவித்து வருகிறோம். இந்த தொடர்ச்சியான ஒன்றுகூடல்கள் பிரான்சு அரசுக்கு தமிழருக்குகான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை,தொடர்ந்தும் படுகொலைகளும், தமிழர் தமது நிலம், உடைமைகளை இழந்து கொண்டிருகிறார்கள் என்பதை கூறுவதற்கும், இந்த அரசுகள் தமது மக்களை காக்கும் கடமையில் இருந்து பின்வாங்க கூடாது என்பதை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.

மறக்கப்பட்டு இருக்கும் அரசியல் கைதிகள், அதில் நிர்மலருபனின் படுகொலை- இதற்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகள் நீதிமன்றம் கொண்டு வந்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரான்சு நாட்டு நாடாளுமன்றத்தில் எமது முறைபாடுகளை கையளிப்போம்- குரல் கொடுப்போம், பிரான்சு வாழ் தமிழ் மக்களே எமது அமைதி தான் எமது உறவுகளின் சாவுக்கும், நிலம் பறிபோவதட்கும் காரணமாகிறது.

ஓங்கி ஒலிக்கும் தமிழர்களின் குரல்தான் உலக மக்களையும் எமது பின்னால் அணிவகுக்க வழிசெய்யும்.

வரும் புதன்கிழமை மாலை 15h00 மணிக்கு பிரான்சு பாராளுமன்றம் முன் ஒன்று கூடுவோம்.

TELO Admin