Hot News
Home » செய்திகள் » கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரசுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த சம்பந்தன் ஆர்வம்

கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரசுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த சம்பந்தன் ஆர்வம்

கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் தான் பேசியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் சம்பந்தமாக திருகோணமலையில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஒரு சந்திப்பு ஒன்றினை சம்பந்தன் நேற்று அவரது இல்லத்தில் நடத்தினார்.   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழசுக் கட்சியின் திருகோணமலை தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய சம்பந்தன் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அரசாங்கமோ அல்லது அரசை ஆதரிக்கும் கட்சிகளோ வெற்றி பெற்றால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக கிழக்கு மாகாணமக்கள் வாக்களித்துள்ளனர் என அரசாங்கம் சர்வதேச ரீதியாக பிரசாரத்தை மேற்கொள்ளும். எனவே அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களோ, அல்லது அரசை ஆதரிக்கும் கட்சியை சேர்ந்தவர்களோ வெற்றி பெறாதவகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என சம்பந்தன் தெரிவித்தார்.

TELO Admin