Hot News
Home » செய்திகள் » வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்!

வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்!

வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டால் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ,பொட்டு அம்மானோ உருவாகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அர சியல் அமைப்பின் 18-வது திருத்தம் நாட்டின் குற்றச் செயல்கள் பெருமளவு அதிகரிக்கக் காரணமாகியுள்ளது என ஐக் கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் கரு ஜயசூரிய நேற்றுக் கூறினார்.17-வது திருத்தத்தில் கூறப்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்கள் நாட்டில் குற்றச் செயல்களைக் குறைக்கவும் அரசாங்கத்தில் உள்ள ஊழலைக் குறைக் கவும் தேவையானவையாக இருந்தன.

அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு பதவிகளையும் பதவி உயர்வுகளையும் வழங்கியதால் நாடு இக்கட்டான நிலைமை க்கு தள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப் பினர் கரு ஜயசூரிய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபோது கூறினார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் இன்றைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் என வெவ்வேறு சட்டங்கள் உள்ளன.பதவிக்காலம் முடியும் முன்னரே மாகாண சபைத் தேர்தல் களை நடத்துவது வீண்விரயமாகவுள்ளது.உண்மையில் வடக்கில் உள்ள மக்கள் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.அங்குதான் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமாயின் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ, பொட்டு அம்மானோ உருவாகலாம்.முன்னர் அரசாங்க ஊடகங்களில் எமக்கு ஆகக்குறைந்த அளவில் சில நிமிடங்கள் அல்லது ஒரு பக்கமாவது கிடைத்து வந்தது.இப்போது எமக்கு அதுகூடக் கிடைப்ப தில்லை.அரசாங்க ஊடகங்கள் எம்மீது அவ தூறு கூற பயன்படுத்தப்படுகின்றன என அவர் மேலும் கூறினார்.

TELO Admin