Hot News
Home » செய்திகள் » நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவற்கான தேசிய செயற்திட்டம் குறித்து தெரியாது: சம்பந்தன்

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவற்கான தேசிய செயற்திட்டம் குறித்து தெரியாது: சம்பந்தன்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்துவதற்கென வரையப்பட்டுள்ள தேசிய செயற்திட்டத்தை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் உள்ளதாக தாம் கருதுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.”அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள் பற்றி எனக்குத் தெரியாதுள்ளமையால் நான் அவை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை” என சம்பந்தன் கூறினார்.

TELO Admin