Hot News
Home » செய்திகள் » தமிழர்கள் புலியைப் போன்றவர்கள்

தமிழர்கள் புலியைப் போன்றவர்கள்

தமிழர்கள் புலியைப் போன்றவர்கள். திறமை கொண்டவர்கள். தமிழகத்துக்கும் மேற்குவங்கத் துக்கும் இடையே நீண்டகால உறவு இருந்து வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகத்தை மிகவும் நேசித்தவர். மாநிலங்களின் தனித்தன்மையை காப்பாற்றவும், மொழி உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாநிலம் தமிழகம்.

அடக்குமுறைகளையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்து உறுதியுடன் போராடியவர் கருணாநிதி. அவர் காட்டிய வழியில் சர்வாதிகாரத்தை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டும்
என சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

50 ஆண்டுகள் திமுக தலைவராக வும், 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று (07) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கோடம் பாக்கம் ‘முரசொலி’ நாளிதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட் டுள்ள கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து ராயப் பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.க.தலைவர் கி.வீரமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பேசினர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: திமுக தலைவராகவும் முதல்வராகவும் இருந்த கரு ணாநிதி, தனது உழைப்பால், சாதனைகளால் தமிழக மக்களின் மனங்களை வென்றவர். தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர். 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வரலாற்றுச் சாதனை படைத் தவர். ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மை மக்களுக்காக வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். அவர்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழந்தவர். தனது ஆட்சியில் சிறுபான்மை மக்களுக் காகவும், விவசாயிகளுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தியுள்ளார். அதனால்தான் மறைந்தாலும் அனைவரது இதயங் களிலும் அவர் வாழ்ந்துகொண்டி ருக்கிறார்.

நாட்டில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. காஷ்மீரத்தில் என்ன நடக்கிறது என்பது அனை வருக்கும் தெரியும். காஷ்மீர் முன் னாள் முதல்வர் பரூக் அப்துல்லா இங்கு வரமுடியாத சூழல் ஏற்பட் டுள்ளது. நாம் அனைவரும் இந்தி யர்கள். ஆனாலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தன்மை உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக் கும் தாய்மொழி உள்ளது. இந்த தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும்.

தமிழர்கள் புலியைப் போன்றவர்கள். திறமை கொண்டவர்கள். தமிழகத்துக்கும் மேற்குவங்கத் துக்கும் இடையே நீண்டகால உறவு இருந்து வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகத்தை மிகவும் நேசித்தவர். மாநிலங்களின் தனித்தன்மையை காப்பாற்றவும், மொழி உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாநிலம் தமிழகம்.

தமிழகத்திலும், மேற்கு வங்கத் திலும் வரும் 2021-ல் சட்டப் பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது. மக்கள் ஆதரவுடன் இதில் நாம் வெற்றி பெறுவோம். திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் எனது சகோதரர். அவரது பெயரிலேயே புரட்சி உள்ளது. மக்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்று சாதனைகள் படைப்பார்.

நாடு தற்போது மிகவும் சோதனை யான காலகட்டத்தில் உள்ளது. எதிர் காலத்தில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய பொறுப்பு இளை ஞர்களுக்கு உள்ளது. அடக்குமுறை களையும், சர்வாதிகாரத்தையும் எதிர்த்து உறுதியுடன் போராடியவர் கருணாநிதி. அவர் காட்டிய வழியில் சர்வாதிகாரத்தை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: திராவிட இயக்கத்தின் கொள்கை களையும், இலக்குகளையும் நமக்கு உணர்த்தவே கருணாநிதிக்கு சிலை அமைக்கிறோம். மொழி உரிமை, மாநில சுயாட்சி, சமூக நீதிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே, இப்போது தான் கருணாநிதி நமக்கு அதிகம் தேவைப்படுகிறார். 1,000 ஆண்டு களில் செய்ய வேண்டியதை 100 ஆண்டுகளில் செய்து காட்டியவர் கருணாநிதி. தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கருணாநிதி இருந்திருந்தால் எம்பிக்களின் செயல்பாடுகளைப் பார்த்து துள்ளிக் குதித்திருப்பார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் கருப்பு அத்தியாயத்தை பாஜக அரசு தொடங்கியுள்ளது. இதை எதிர்த்தால் தேச விரோதி என்கிறார்கள். எங்களுக்கு தேச பக்தியை கற்றுத்தர யாருக்கும் தகுதியில்லை. தேச பக்தி என்ற பெயரில் மதவெறியைத் தூண்டி வருவதை திமுக எப்போதும் உறுதியுடன் எதிர்க்கும்.

புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி: கருணாநிதி ஆட்சியில் தலித் கள், பிற்படுத்தப்பட்ட, சிறு பான்மை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வாழ்நாள் முழுவதும் அவர் போரா டினார். யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.

ஆனால், பெரிய மாநிலமான ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிர தேசங்களாக மத்திய பாஜக அரசு மாற்றியுள்ளது. இதுபோன்ற சர் வாதிகார அரசை எதிர்த்து நாம் ஒருங் கிணைந்து போராட வேண்டும்.

தி.க. தலைவர் கி.வீரமணி: தனது வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டவர் கருணாநிதி. பெரியார், அண்ணா விடம் பாடம் பயின்ற அவர், அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்டு சாதனை படைத் தார். நாங்கள் எப்போதும் அடி பணிய மாட்டோம். நிமிர்ந்து நிற் போம் என்றவர் கருணாநிதி. கரு ணாநிதி தந்த 5 முழக்கங்களே நம் ஆயுதங்கள். அதை வைத்து தமி ழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை யும் காப்பாற்ற முடியும்.

கவிஞர் வைரமுத்து: கருணாநிதி யின் ஒட்டுமொத்த திறமைகளையும் கூட்டிப் பார்த்தால் இப்படியொரு தலைவர் உருவாக பல நூற் றாண்டுகள் ஆகும். 6 தொகுதிகள் அடங்கிய வாழ்க்கை வரலாறு எழுதும் அளவுக்கு வாழ்ந்து காட்டிய வர். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடி யேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தமிழ், தமிழர்களின் இன அடையாளம். கருணாநிதி தமிழினத்தின் அடை யாளம். எனவே, தமிழையும் கரு ணாநிதியையும் தமிழர்கள் ஒரு போதும் மறக்கக் கூடாது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.