Hot News
Home » செய்திகள் » உவெஸ்லி உயர்தர பாடசாலை காவல் தெய்வமாகவும் ஒரு போராட்ட வீரனாகவும் இருப்பதை காணமுடிகிறது

உவெஸ்லி உயர்தர பாடசாலை காவல் தெய்வமாகவும் ஒரு போராட்ட வீரனாகவும் இருப்பதை காணமுடிகிறது

அம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 136ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தவிசாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.

இதன் போது நிகழ்வுகள் பாடசாலையின் பழைய மாணவர்களின் சுடரேற்றலுடன், மாணவிகளின் பரத நாட்டிய நடனங்களுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் தங்கம் , மகாண மட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதனை தொடர்ந்து 136ஆம் ஆண்டு உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வரலாற்றை சுமந்த நூல் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேசத்திலே ஒரு எல்லை காவலனாக உவெஸ்லி உயர்தர பாடசாலை மிளிர்வதை கண்ணூடாக காணமுடிகிறது.

ஏனையவர்களின் நில ஆக்கிரமிப்பு , அச்சுறுத்தல், பாதுகாக்கும் காவல் தெய்வமாகவும் ஒரு போராட்ட வீரனாகவும் இருப்பதை காணமுடிகிறது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.