Hot News
Home » தற்போதைய செய்திகள் » அமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடனான எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை மீளாய்வு செய்யப் போகிறது என்றும், இவற்றை மீளாய்வு செய்யும் வரை, இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடாது என்றும் சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த போது, அமெரிக்காவுடன் எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான முலதிக சொலிசிற்றர் ஜெனரல், பர்சானா ஜமீல், புதிய அரசாங்கம் அமெரிக்காவுடனான எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை மீளாய்வு செய்யப் போகிறது என்றும், இவற்றை மீளாய்வு செய்யும் வரை, இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த மனுக்களை மீண்டும் மார்ச் 25ஆம் நாள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என்று உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு தீர்மானித்துள்ளது.