Hot News
Home » செய்திகள் » சுதந்திர ஊடக மையம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் திறந்தநிலை கோரிக்கை

சுதந்திர ஊடக மையம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் திறந்தநிலை கோரிக்கை

இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் செயற்பட வேண்டும் என்று இலங்கையின் சுதந்திர ஊடக மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திர ஊடக மையம் இது தொடர்பில் திறந்தநிலை கோரிக்கை ஒன்றை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் விடுத்துள்ளது.

அதில் உள்ளூரில் மனித உரிமைகளை காத்தல் மற்றும் பேச்சு சுதந்திரம் என்ற விடயங்களை பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பேச்சு சுதந்திரத்துக்கான உரிமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளமையையும் சுதந்திர ஊடக மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

போரின் போது இலங்கையில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்.

இதன்காரணமாக 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலஙகையின் ஜனாதிபதியே பொதுநலவாய நாடுகளின் தலைவராக இருக்கப்போகிறார். எனவே இதன்போது பொதுநலவாய கொள்கைகள் பின்பற்றப்படும் என்று தாம் நம்பிக்கை கொள்வதாக சுதந்திர ஊடக மையம் குறிப்பிட்டுள்ளது.

TELO Media Team 1