Hot News
Home » செய்திகள் » கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை – மத்திய அரசாங்கம்

கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை – மத்திய அரசாங்கம்

கச்சத்தீவு இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட இடமாகும்

கச்சத்தீவு முடிந்த விடயம் என்ற அடிப்படையில் அங்கு இந்திய மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடி உரிமை இல்லை என்று இந்திய மத்திய அரசாங்கம்
சென்னை மேல்நீதிமன்றத்தில் இதனை மத்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது

கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிர்மனுவை தாக்கல் செய்த மத்திய அரசாங்கம் இதனை சத்;தியகடதாசி மூலம் தெரிவித்துள்ளது

1974 ஆம் ஆண்டு இலங்கையுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவில் படகுகளில் மீன்பிடிக்கமுடியாது கப்பல்களில் மீன்பிடிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

எனினும் 1976 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கப்பல்களில் சென்று வரும் உரிமையும் இல்லாமல் போனது என்று மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது
இந்தநிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது

TELO Media Team 1