Hot News
Home » செய்திகள் » பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி. இந்தியாவின் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி. இந்தியாவின் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக இலங்கையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பயிற்சியளிக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் இன்று மறுத்துள்ளது

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்

இந்தக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை சிறிய நாடு என்ற அடிப்படையில் இங்கு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கை இராணுவத்துக்கே தமது பயிற்சிகளை மேற்கொள்ளமுடியாதுள்ளது

இந்தநிலையில் வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு இங்கு பயிற்சி எடுப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என்று வணிகசூரிய கூறியுள்ளார்

இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரத்துடன் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என்று கூறி இந்தியாவில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

இவர்ää இந்தியாää இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்ள தயாராக இருந்ததாக தெற்காசியாவின் பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்திருந்தார்

இந்தநிலையில் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான ஹ_சைன் என்பவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அதிகாரியின் ஊடகத்துறையில் பணியாற்றி வந்தார் என்று இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது

TELO Media Team 1