Hot News
Home » செய்திகள் » மீண்டும் சீருடை தரிக்கும் 2000 முன்னாள் போராளிகள்

மீண்டும் சீருடை தரிக்கும் 2000 முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 2000 பேர் இன்று சிறிலங்காவின் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக, இந்த ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து, நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5000 பேரை, சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இவர்களில் ஒரு தொகுதியினருக்கே இன்று நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் நியமனக் கடிதங்களை வழங்கவுள்ளார். இன்று சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்படும் இவர்களுக்கு மாதாந்தம் 18 ஆயிரம் ரூபாவுக்கும் குறையாத சம்பளம் வழங்கப்படவுள்ளதுடன். ஏனைய வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்துள்ளார். சிவில் பாதுகாப்புப் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவோருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, வடபகுதியில் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

TELO Admin