Hot News
Home » செய்திகள் » குண்டு இருப்பதாக தகவல் கொடுத்தவரை இனங்கண்டு விசாரிக்க வேண்டும்- கருணாகரன்

குண்டு இருப்பதாக தகவல் கொடுத்தவரை இனங்கண்டு விசாரிக்க வேண்டும்- கருணாகரன்

எனது வளவிற்குள் குண்டு இருப்பதாக நள்ளிரவு 12மணிக்கு காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தவரை உடனடியாக கைது செய்து விசாரித்தால் அக்குண்டுகள் எப்படி எனது வீட்டு மதிலோரம் வந்தது என்ற விபரத்தை காவல்துறையினர் அறிந்து கொள்ள முடியும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தினக்கதிர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். சில தீய சக்திகள் என்னை பழிவாங்குவதற்காக இக்காரியத்தை செய்திருக்கின்றனர். எனது வீட்டு மதிலோரம் இரு குண்டுகளை தாங்கள் மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் எனக்கு தெரிவித்துள்ளனர். இரவு 12.30மணியளவில் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குண்டு இருப்பதாக கூறினார் என காவல்துறையினர் தன்னிடம் தெரிவித்தனர் என கருணாகரன் கூறினார்.இதேவேளை கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் வளவிற்குள் இருந்து வெடிகுண்டுகளை தாம் கைப்பற்றி இருப்பதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.செட்டிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் மதிலோரம் இரு குண்டுகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரவு 12மணியளவில் ஒருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்று குண்டை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று ஒரு நண்பகல் ஒரு மணியளவில் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் அக்குண்டுகளை செயலிழக்க செய்தனர்.இரவு வீட்டில் கருணாகரனின் தாயும் தந்தையும் மட்டுமே இருந்துள்ளனர். கருணாகரன் மாகாணசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலைக்கு சென்றிருந்தார்.கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதற்காக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினர் முயற்சிகள் மேற்கொண்ட போது அதற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கருணாகரன் எடுத்திருந்தார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் இக்காரிணம் செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TELO Admin