Hot News
Home » செய்திகள் » வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயம், கால்நடை, நீர்பாசனம், தென்னைப் பயிர்ச்செய்கை மற்றும் பனை அபிவிருத்தி, மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு விடங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. கூட்டத்தின் தொடக்கத்தில் அரச அதிபரின் வரவேற்புரையினைத் தொடர்ந்து கடந்த கூட்டத்தின் அறிக்கை மற்றும் இன்றைய நிகழ்சி நிரல் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமையால் பெரும் குழப்பமான சூழ்நிலை உருவானது.நீண்ட நேரமாக தொடர்ந்த பிரதிவாதங்களுக்கு பின்னர் தவறை ஏற்றுக்கொண்ட நிகழ்விற்கு தலைமைதாங்கிய அமைச்சர் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாது என்று உறுதியளித்து கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.இதில் மீள்குடியேற்றம் மற்றும் நில அபகரிப்புக்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினரால் ஆளுனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பரீசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்காக  எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.இந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுமந்திரன், முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பேரேரா மற்றும் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

TELO Admin