Hot News
Home » செய்திகள் » 5825 கோடியே 95 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாவால் பாதுகாப்பு செலவீனம் அதிகரிப்பு

5825 கோடியே 95 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாவால் பாதுகாப்பு செலவீனம் அதிகரிப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 500 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இதில் பாதுகாப்பு செலவீனம் 28,950 கோடியே 25 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாவாகும். 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனம் 5825 கோடியே 95 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா அதிகமாகும்.2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு செலவீனமாக அரசாங்கம் 23 ஆயிரத்து 124 கோடியே 30 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருந்தது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 5071 கோடியே 55 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா அதிகமாகும்.கடந்த ஆண்டு மொத்த செலவீனமாக அரசாங்கம் 1 இலட்சத்து 28 ஆயிரத்து 428 கோடியே 44 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாவை ஒதுக்கியிருந்தது.பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் 2013 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவைக்கு சமர்ப்பித்தார்.

TELO Admin