Hot News
Home » செய்திகள் » வட மாகாண ஆளுனருக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடலாம் – TNA

வட மாகாண ஆளுனருக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடலாம் – TNA

வட மாகாண ஆளுனருக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. திவிநெகும சட்டத்திற்கு அங்கீகாரம் அளி;த்தால், அது நீதிமன்றத்தை அவமரியாதை செய்தமையாகவே கருதப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய உச்ச நீதிமன்றம் சட்டம் விளக்கம் அளிப்பதற்கு முன்னதாக, வட மாகாண ஆளுனர் சட்டத்தை அங்கீகரிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபை நிறுவப்படுவதற்கு முன்னதாக திவிநெகும சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.திவிநெகும சட்டம் பாராளுமன்றில் சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்திற்கு முன்னதாக வட மாகாண ஆளுனர் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தால், அது நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் வகையில் அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

TELO Admin