இன மத நல்லிணக்கக்கத்திற்காக யாழில் பொலிஸாரினால் வழிபாடுகள்!

நாட்டில் இன மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நேற்றையதினம் யாழில் உள்ள இரண்டு ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் மற்றும் பறாளாய் பிள்ளையார் ஆலயத்தில் இந்த பூஜை வழிபாடுகள் சிறப்புற முன்னெடுக்கப்பட்டன.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கொஸ்தா அவர்களது ஏற்பாட்டில் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்த பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.