நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அறிவிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (30) மாலை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று தமிழ் தேசிய களத்தில் தூய்மையான மாற்றத்திற்கான மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

இளையவர்களும் பெண்களும் நிபுணர்களும் இந்த குழுமத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்க விரும்புகின்றனர் அதே நேரம் தமிழ் தேசிய இனம் தன் உரிமைகளை இன்னும் இத்தீவில் பெற்று கொள்ளாத நிலையில் தியாக வேள்வியை கடந்து இன அழிப்பிற்கு உள்ளாகி பரிகார நீதியையும் நிரந்திர சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் கோரி நிற்கின்ற சூழலில் கட்சி அரசியலை தாண்டி தமிழ்த் தேசியக்கொள்கை அரசியல் தளமே முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

முதிர்ந்த அரசியல் தலைவர்கள் வழிகாட்ட நிபுணத்துவமும் பல் பரிணாம ஆளுமையும் தமிழ்த் தேசிய பற்றுறுதியும் கொண்ட தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் அணி வடகிழக்கில் களம் காண வேண்டும் என்பது இன்று தமிழர்கள் அனைவரது வேணவாக இருக்கின்றது.

கோட்பாட்டுத் தளத்தில் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் பொதுச்சபை என்பவற்றின் கருத்தாணைகளை தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டு சமகால வாழ்வியல் விடயங்களையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த தமிழ்ப் பொது வேட்பாளர்கள் அணியினர் கொண்டிருப்பர்.

இதற்கான வடகிழக்கு தழுவிய தூய தமிழ்த் தேசிய முகங்களை தொகுதிவாரியாக அனைத்து சமத்துவ பிரதிபலிப்புக்களுடன் கண்டறிய உதவுமாறு தமிழர் சம உரிமை இயக்கம் அனைத்து தமிழ் மக்களிற்கும் அறைகூவல் விடுகின்றது.