நிதி மோசடி வழக்கில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

1 கோடி ரூபா நிதி மோசடி நடைபெற்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே நேற்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பெண்ணொருவரை அவுஸ்திரேலியாவில் வாழ அனுப்புவதாக வாக்குறுதியளித்து அமைச்சரின் செயலாளர் ஒருவர் இந்தத் தொகையைப் பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொலிஸாரின் விசாரணையில், குறித்த பெண்ணிடம் இருந்து ஒருங்கிணைப்பு செயலாளர் பணத்தை பெற்றுக்கொண்டு அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் இரண்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அந்த வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், அந்த பெண்ணை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று அனுப்பிவைத்ததாகவும், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.