ஆயுதப் படைகளை மேம்படுத்துவதற்கு திட்டமிடுகிறதா அநுர அரசு!

பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு பல ‘வழக்கத்திற்கு மாறான’ அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர், முப்படைகள் தொழில் ரீதியாக தரமுயர்த்துவது உட்பட அனைத்து அம்சங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கடந்த வார இறுதியில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்கொந்தாவிடம், ஆயுதப்படைகளின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வது என்பதன் அர்த்தம் என்னவென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த கடமையை செய்வதற்கு அவசியமான காரணங்கள் அனைத்தையும் நாம் கண்டறிந்துள்ளோம்.

எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் நாம் கண்டறிந்துள்ளோம்.

ஆகவே என்னுடைய தலைமையின் கீழ் நாட்டு மக்கள், பொது மக்கள் அளெசகரியங்களை எதிர்கொள்ளும் அனைத்து முறைகளிலும் ஏற்படும் சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன.

புதுக்குடியிருப்பிலுள்ள உணவகங்களில் திடீர் சோதனை
புதுக்குடியிருப்பிலுள்ள உணவகங்களில் திடீர் சோதனை
நவீன தொழில்நுட்பம்

அந்த சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்களுக்கு முடிந்தவரை விரைவாக நிவாரணமளித்து முப்படையினருக்கும் காணப்படும் இயலுமையை மேலும் முன்னேற்றமடையச் செய்து அவர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அந்த பணியை நிறைவு செய்வதே எமது அரசின் எதிர்பார்ப்பு.

ஆயுதப்படைகளை தொழில்சார் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் செயற்படவுள்ளோம்.

இராணுவத்தின் அனைத்து பக்கத்திலும் நவீன தொழில்நுட்பம், பயிற்சி, பயற்சிப் பெற வேண்டிய வாய்ப்பு, தொழில் ரீதியாக உயர் நிலைக்குச் கொண்டுச் செல்வதற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து முறையான வகையில் செயற்படுவதே எமது எதிர்பார்ப்பு“ என்றார்.

Posted in Uncategorized

யானை சின்னத்தில் களமிறங்க தயாராகும் ரணிலின் ஆதரவாளர்கள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யானை சின்னத்தில் அல்லது வேறு ஒரு சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புக்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

அதேவேளை, எரிபொருள் கொள்கலன் சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் குறித்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இடம்பெற்ற கலந்துரையாடல்
எதிர்வரும் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது, எரிவாயு கொள்கலன் சின்னத்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் யானை சின்னத்தில் அல்லது வேறு பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எதிர்கால அரசாங்கத்துடன் புரிந்துணர்வுக்கு தயாராகும் டக்ளஸ்!

ஆயுதம் ஏந்திய அனுபவம் கொண்ட புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமது குழு தகுதியானது என தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் என்ற அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவர்களும் உங்களுக்குத் தெரியும் ஒரு ஆயுத போராட்டத்தின் ஊடாகத்தான் இன்று தேசிய நீரோட்டத்தில் ஜனநாயக வழிக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல் நாங்களும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். கொள்கை எனப் பார்க்கையில் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் கொள்கையில் வேறுபாடுகள் இல்லை.

அதாவது அவர்கள் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். ஈபிடிபியும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தது. அந்த வகையில் எங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றது.” என்றார் டக்லஸ்.

டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த 2004 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் குறித்தும் ஈபிடிபி தலைவர் அதிக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து ஈபிடிபியின் வீணை சின்னத்தின் வெற்றியின் பின்னர் நிச்சயம் அது நிறைவேறும் என்பதை கூறிக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா 1994 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்த சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு நேற்று (02) கொழும்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களை மதிப்பாய்வு செய்வது மற்றும் முக்கியமான நிதி சவால்களை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தொடர்பில் சீனாவின் உறுதிமொழி
கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தொடர்பில் சீனாவின் உறுதிமொழி
முந்தைய அரசாங்கம்
முன்னதாக ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதி அதிகாரிகள் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி வந்துள்ளதுடன் பல்வேறு உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

எனினும், இந்த உடன்பாடுகள், பொதுமக்களை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தற்போதைய அரசாங்க கட்சி தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்தது.

இதன் அடிப்படையிலேயே இன்றைய சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறி கொள்ளப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் வெளியான தகவல்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் வழங்குவதற்கான முடிவினை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதித்துறை மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை மீண்டும் அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அன்றைய முன்னாள் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், ஆட்சி மாற்றத்துடன் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கமைய, தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராகி மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றி இருந்தார். எனினும் சம்பந்தன் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளித்தார்.

இதன்பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சம்பந்தன் தலைவராக இருக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்.

உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள்,ஊழியர்களின் சம்பளம் என்பன அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு அந்த வீட்டின் பராமரிப்பு பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசியல் ஓய்வை அறிவித்தார் மகிந்த யாப்பா!

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று (02.10.2024)வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், அரசியலில் தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

43 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இந்நிலைமையினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தனது எதிர்கால வாழ்க்கையை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தாம் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்கடிக்கப்படவில்லை எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் சுட்டிக்காட்டியள்ளார்.

Posted in Uncategorized

அநுரவுடன் கைகோர்க்க சஜித் தரப்பில் இணக்கம்!

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம், பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும் பட்சத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைக்கும் என்று அதன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிவிப்பானது நேற்றைய தினம் (02.09.2024) விடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தமது தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதி பதவியை வகிக்கும் அதே கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற மக்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் என்று கருத்துரைத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியில் சிறீதரன் – சிறிநேசன் ஆகியோரை நீக்குவதில் தீவிர திட்டம்

இலங்கையின் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இவ்வாறான மாற்றங்கள் வெறுமனே இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழ் அரசியல் கட்சிகள், முக்கியமாக தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் நகர்வுகளிலும் நிகழ வாய்ப்புள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சிக்கு யார் தலைவர் என்ற பிரச்சினை மிக தீவிரமாக பேசப்பட்டது. அதன்பின்னர் தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல விவாதங்களும் நடைபெற்றன.

இவ்வாறு ஒவ்வொரு அரசியல் நகர்வுகளிலும் தமிழ் அரசியல்வாதிகள் தமது கருத்து வேறுபாடுகளால் முரண்பட்ட வண்ணமே உள்ளனர்.

இதன் உச்சகட்டமாக தற்போது தமிழரசுக் கட்சியில் இருந்து சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோரை நீக்குவதற்கு தீவிர திட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அநுரவுடன் இணைந்து பணியாற்ற தயாராகும் இந்தியா : தமிழ்கட்சிகளிடம் தூதுவர் தெரிவித்த விடயம்

நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேட்கப்பட்டோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

இந்திய தூதுவர் கூறிய விடயம்
நேற்று இந்திய தூதுவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. அவையாவன தற்போதுள்ள ஜனாதிபதியின் செயற்பாட்டில் தாங்களும் இணைந்து செயற்படப் போவதாக இந்திய தூதுவர் எடுத்துக் கூறினார். அடுத்து வடக்கில் அதிகளமான அபிவிருத்தியை இந்தியா செய்ய இருக்கின்றது. அவ்வாறான அபிவிருத்தியின் போது அதன் பலன்களை தமிழ் மக்கள் அடைய வேண்டும் என்ற ரீதியில் அவருடைய கருத்துக்கள் இருந்தன.

அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும். தற்போது உள்ள அந்த பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும்.

அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம். அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் எடுத்துக் கூறினார்.

இந்நிலையில் தமிழரசு கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது. இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன்.

இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசு கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும்.

அந்த வகையில் எங்களைப் பொறுத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம். விமர்சனங்கள் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் வெளிப்படையாக சஜித்துக்கும் ரணிலுக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்திலே பொது வேட்பாளராக களம் இறங்கிய அரியநேந்திரன் 2 லட்சம் வாக்குகளை பெற்றது என்பது சாதாரண விடயம் அல்ல. நாங்கள் இன்னும் முழுமையாக வேலை செய்திருந்தால் கூடுதலாக வாக்குகளை பெற்று இருக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.

இந்த காலத்திலே விமர்சனங்கள் மேலோங்கி இருக்கின்றது. தேசியத்தோடு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தலைவர்களுக்கு விரலை நீட்டி அவருக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன நிலைமை காணப்பட்டது. அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கின்றது. அவை ஆராயப்பட வேண்டும்.

குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது. நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும்.

மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும்.

வன்னியை பொறுத்தவரை அபாயகரமான நிலை
ஆகவே வன்னியை பொறுத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது. அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும்.

ஆகவே மக்கள் கோபப்படும் அளவிற்கு எமது செயற்பாடுகள் இருக்காது, இருக்கவும் கூடாது என கேட்டுக் கொள்வதோடு ஒரே அணியில் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தான் சாதகமாக இருக்கும் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் மாயமான கிழக்கு எம்.பிக்கள் : லவக்குமார் குற்றச்சாட்டு!

கிழக்கை மீட்கப் போகின்றோம், அபிவிருத்தியை செய்யப்போகின்றோம் என்றவர்கள் இன்று புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் ஒழித்து திரிகின்றனர் என சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் சுயேடட்சைக்குழுவாக போட்டியிடுவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை (1) தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழினத்துக்காகவும் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காகவும் மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

கடந்த கால அரசியல் பயணங்களை பார்க்கின்றபோது பலவிதமானவர்கள் பலவித அரசியல் கோணங்களிலே பயணித்தனர்.

ஏங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்பி பலவிதமான தடைகள் எதிர்ப்புக்கு மத்தியிலே இலங்கை அரசையும் எதிர்த்து நாங்கள் போராடி எமது மக்களின் நீதிக்கான பயணத்தை நடாத்தவேண்டிய காலம் மாறவேண்டும்” என்றார்.

Posted in Uncategorized