கொழும்பு துறைமுக புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெகுஜன புதைகுழியான கொழும்பு துறைமுக புதைகுழியில் முதற்கட்ட அகழ்வு பணிகள் எட்டு நாட்களுக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்ட நிலையில் குறைந்தது இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 5ஆம் திகதி வியாழன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு வெகுஜன புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது குறைந்தது மேலும் நான்கு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தலைநகரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கொழும்பு துறைமுக பழைய செயலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பாரிய புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு மனித எலும்புக்கூடுகளில் ஒன்றின் மண்டை ஓட்டை கண்டுபிடிக்காத நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி அழ்வினை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அகழ்வு நாட்களில் மீட்கப்பட்ட சிறிய எலும்புத் துண்டுகள் தற்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிபபிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பாரிய புதைகுழி தொடர்பான விசாரணைகள் விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதியின் நிர்மாணிப் பணிகளுக்காக பூமியைத் தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் நீதிபதி பண்டார இலங்கசிங்க முன்னிலையில் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஜூலை 15, 2024 அன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டபோது 52 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட நிபுணர் அறிக்கையின்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொண்ணூறுகளில் முறைசாரா முறையில் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Posted in Uncategorized

இலங்கை பொருளாதாரத்தில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள்!

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏற்றுமதி வருமானம் 5.6 சதவீதமும், இறக்குமதி செலவு 9.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் எரிபொருளுக்காக அதிகளவில் இறக்குமதி செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி
அதன்படி, கடந்த 7 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2 ஆயிரத்து 548 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான முதலாம் காலாண்டில் 5.3 சதவீதமாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீதமாக பதிவாகி பொருளாதாரத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்திப் பேரணி!

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்தி எழுச்சிப்பயணம் ஒன்று இன்றையதினம் நடாத்தப்பட்டது.
குறித்த ஊர்தி எழுச்சிப்பயணமானது, “நாமும் இணைந்தால் பலமே” என்ற தொனிப்பொருளில் தியாக தீபம் திலீபன் நோன்பிருந்த ஆரம்ப நாளான இன்று (15) முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரும் குறித்த பயணமானது  பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை, “Roxeth recreation ground Ha2 8LF South Harrow ” இப்பயணம் நிறைவடைந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையின் முக்கியஸ்தர் திரு.கேதீஸ்வரன் தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Posted in Uncategorized

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக தயாராகும் அமெரிக்கா!

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் தமது எக்ஸ் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான தேர்தல்
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்திற்கு எடுக்கப்படக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை நாங்கள் கொண்டாடுகிறோம்.

தேர்தல்கள் மூலம் தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கருத்து இருப்பதை உறுதிசெய்கிறோம்.

இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

ஏற்கனவே இலங்கையில் குறித்த நாடுகளின் நலன்சார்ந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ்ப்பொது வேட்பாளருடன் முக்கிய கலந்துரையாடலில் மாவை!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேர்தல் கள நிலவரம்
இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

ட்ரம்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்!

அமெரிக்காவின் (US) முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தியினை அமெரிக்காவின் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள ட்ரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்கு வெளியே இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது, ட்ரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ள நிலையில் அங்கிருந்த இரண்டு நபர்களுக்கு இடையே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ட்ரம்ப், அவ்விடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான ஒரு தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது.

Posted in Uncategorized

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி – வெளியான தகவல்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு, மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு புள்ளடியை இடமுடியும். அதேவேளை விருப்பு வாக்குகளையும் வழங்குவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தாம் விரும்பும் வேட்பாளருக்கு முதலாவது இலக்கத்தையும் விருப்பம் ஏற்படுமாயின் ஏனைய இரண்டாம், மூன்றாம் வேட்பாளர்களுக்கு உரிய இலக்கங்களை பதிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

புள்ளிடியோடு இலக்கங்களை பதிவு செய்தால் உரிய வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1982ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காலமும் நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் விருப்பு வாக்குகளை எண்ணத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது.

இரண்டாவது வாக்குகளில் எண்ணுவதற்கான தேவைகள் ஏற்படுமாயின் அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழில் பரப்புரை மேடையில் திடீரென சூடாகிய ரிஷாத் பதியுதீன்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றிக்கொண்டு இருந்தார். இதன்போது அவருக்காக ஒதுக்கிய நேரம் நிறைவடைந்து விட்டதாக கடதாசியில் எழுதி அவருக்கு முன்னால் வைக்கப்பட்டது.
அதனை படித்துப் பார்த்த ரிஷாத் பதியுதீன், அந்த கடதாசியை எடுத்து ஆவேசத்துடன் கீழே வீசிவிட்டு தனது உரையை முடித்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்தார். அவரது இந்த செயற்பாடானது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் அரியநேந்திரனுக்கு ஆதரவு!

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது.

இன்றையதினம் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் கூட்டமானது, தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தமிழ்ப்பொது வேட்பாளர் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்நிலையில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Posted in Uncategorized

இலங்கை இராணுவத்திற்கு ஆதரவான ஆவணத்தில் கையொப்பமிட்ட சாணக்கியன்!

2009 ஆம் ஆண்டு நாட்டில் நிறைவடைந்த யுத்த முடிவில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மாத்திரமே உயிரிழந்தனர் என்ற தீர்மானத்துக்கு ஈபிடிபி தரப்பு மாத்திரம்தான் கையொப்பமிட்டுள்ளது என எண்ணிக்கொண்டிருந்தால் கிழக்கில் இரா. சாணக்கியனும் அவர்களுடன் சேர்ந்து கையொப்பமிட்டுள்ளார் என கரைச்சி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவளித்துள்ள நிலையில், தமிழர்களுக்கான தீர்வு எதனையும் முன்வைக்காத அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு எதிராக சுமந்திரனால் குரல் எழுப்ப முடியுமா எனவும் அவர் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் முகவர்களை வைத்து வழக்கு தாக்கல் செய்த சுமந்திரனால் சஜித்துக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியுமா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொது விருப்பு இல்லாமல் தனது முடிவுதான் இறுதி என கூறும் சுமந்திரனின் கருத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized