பதற்றமடைய வேண்டாம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும்,தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம்.

இதேவேளை தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை.

வன்முறைகள், அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை, அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரச புலனாய்வின் முக்கிய தகவல்! பெரும் பாய்ச்சலுக்கு தயாராகும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முதலாம் இடத்தை பெறுபவர் 40 வீதமான வாக்குகளையும் இரண்டாவது இடத்தை பெறுபவர் 35 வீதமான வாக்குகளையும் பெற உள்ளதாக அரச புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாய்ச்சலுக்கு தயாராகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அலை உருவாகி வருகின்றது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பில் அதிகளவான வாக்குகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே வழக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், அதிகளவான இளைஞர்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள்.

Posted in Uncategorized

ரணிலால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபயவே பலி : அநுர பகிரங்கம்

மோசடி, ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் அற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மக்களை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் உருவாக்கும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு புதிய சகாப்தத்தின் மாற்றத்தை நோக்கி, நாட்டை முன் நகர்த்துவதற்காக செப்டம்பர் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றுகிறது என்று திஸாநாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே விக்ரமசிங்கவினால் ஏற்பட்ட நெருக்கடிக்கு பலியாகியதாகவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.

சர்வதேச இறையாண்மை பத்திரத்திலிருந்து இலங்கை 15.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ச காலத்தில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே பெறப்பட்டதாகவும், மீதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு வருட நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கோட்டாபய பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், ரணில் கடனை செலுத்துவதை நிறுத்திவிட்டு, சேமிக்கப்பட்ட டொலரில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்ததாக அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் – தம்பி ராசா குற்றசாட்டு!

தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார்.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன்  பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள்  மூலம் தகவல்கள் கசிந்துள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு  திரைப்படம் ஒன்றில் வாக்குச் சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என பணம் வாங்கியவர்கள் எல்லோருக்கும் புள்ளடி போட்ட வாக்குச் சீட்டை காண்பித்த மையை படத்தில் பார்த்திருக்கிறோம்
அவ்வாறு சம்பவமாக மாவை மற்றும் மகனின் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.
சஜித்துக்கு ஆதரவு தமிழரசு கட்சி தீர்மானம் என கூறும் தலைவர் மாவை ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டுக்கு வந்தபோது நீங்கள் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்கிறார்.
அதன் பின் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்தில் சஜித்துக்கு தமிழரசு ஆதரவு வழங்கியதில் மாற்றம் இல்லை எனக் கூறிவிட்டு வரும் வழியில் கிளிநொச்சியில் பொது வேட்பாளர் ஆதரவு மேடையில் ஏறினார்.
மகன் கலை அமுதன் யாழ் வந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் மறுநாள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார்.
இவற்றையெல்லாம் நோக்கும்போது பணம் வாங்கியவர்களிடம் எமது இனத்தை காட்டி கொடுத்து சந்தர்ப்பவாத அரசியலை தகப்பனும் மகனும் செய்கிறார்கள்.
பணம் வழங்கியவர்கள் யாருக்கு வாக்கு போட்டீர்கள் என கேட்டால் வடிவேல் பானில் இருவரும் வாக்கு சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என சொல்லு நிலை ஏற்படும்.
தந்தை செல்வாவால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட தமிழரசு கட்சி இன்று பணத்துக்காக பல கோணங்களில் பிரிந்து நிற்கிறது.
தந்தை செல்வாவின் மனைவி இந்த அரசியல் செயற்பாடுகள் உங்களுக்கு வேண்டாம் என மண்ணை அள்ளி அவர் மீது தூவியபோதும் அதனை தட்டிவிட்டு இனத்துக்காக என்னால் முடிந்தவரை போராடுவேன் என கூறிய பெருந்தலைவர் உருவாக்கிய கட்சி.
ஆகவே தமிழரசு கட்சியை சீரழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்களால் விரைவில் துரத்தி அடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

வாக்களித்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு செல்லுங்கள் – மக்களுக்கு விசேட அறிவிப்பு!

எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.

காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிரசார நடவடிக்கை
அதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மொட்டுவின் இனவாத அரசியலுக்கு தலைமையாக ரணில்: அநுர பகிரங்கம்!

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இனவாத செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தலைமை வகித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாவனல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “சிறிலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் இனவாத அரசியலையே முன்னெடுக்கின்றது.2015ஆம் ஆண்டு ராஜபக்‌ஷக்கள் தோல்வியடைந்தனர்.

அவர்கள் பொது மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொள்ளையடித்திருந்தனர். மக்கள் அதற்கு எதிராக வாக்களித்ததை அடுத்து அவர்கள் தோல்வியைச் சந்தித்தனர்.

2016ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களையடுத்து, தோல்வியடைந்த மகிந்த குழுவினர் மீண்டும் தலை நிமிர்ந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அதனைத் தொடர்ந்து ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் மகிந்த தரப்பு முழுமையாகத் தலைநிமிர்ந்ததுடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதன் பின்னரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள், இவ்வாறான சூழலிலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.

அதன்பின்னர் வாக்களித்த மக்கள் அவர்களை விரட்டியடித்தார்கள் எனினும் அந்த குழுவினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தலைமை வகித்து வந்தார்” என்றார்.

Posted in Uncategorized

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பிளவடைந்துள்ள தமிழரசுக்கட்சி : ஜெயசிறில் சங்கடம்!

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு முக்கியஸ்தருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் இரண்டாக பிரிந்து நிற்பது வடகிழக்கு தமிழர்களுக்கு சங்கடங்களை தருகின்றது.

தமிழரசுக்கட்சி தலைமைகள் தளம்பல் நிலையில் இருந்தமையினால் உறுப்பினர்கள் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றார்கள்.

இவ்வாறு பல உருவங்களாக பிரிவதற்கு தமிழரசுக் கட்சி தலைமைகள் விட்ட பிழையே காரணமாகும்.நாங்கள் இந்த அரசாங்கத்தில் எவரையும் நம்ப விரும்பவில்லை.

இங்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது.எமது மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். எனவே எதிர்வரும் தேர்தலில் எமது கோரிக்கையானது சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதும் எமது ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதுமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ரணில் – அநுரவை நம்பி ஏமாறாதீர்கள்! மக்களுக்கு சஜித் எச்சரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டைக் கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொதுமக்களின் யுகத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா? என்ற தீர்மானம் மக்கள் வசமே காணப்படுகின்றது.

இன்று ரணில் மற்றும் அநுர பெரிய டீல் ஒன்றை செய்திருக்கின்றார்கள். அது சஜித் பிரேமதாஸவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்கின்ற டீல் ஆகும்.

ரணில் மற்றும் அநுர அரசியல் ஜோடி எந்த அளவு டீல் செய்து கொண்டாலும், மக்களை சுபீட்சமான வளமான வாழ்க்கைக்கு கொண்டு செல்வதற்கு மக்களுடனே எமது டீல் காணப்படுகின்றது.” – என்றார்.

Posted in Uncategorized

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரியநேந்திரனை ஆதரித்து பொதுக்கூட்டம்!

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி பொது வேட்பாளர் அரியநேந்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொதுக்கூட்டம் நேற்று (16.09.2024) யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், க. அருந்துவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

பெருந்திரளான மக்கள்
இந்நிகழ்வில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த போராளிகள் நலன்புரிச் சங்கம்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக போராளிகள் நலன்புரி சங்க தலைவர் பொ.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழர்களின் விடா முயற்சியின் ஒரு பெருந்தெரிவே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றும் இந்த தொடர் பயணத்தின் அடையாளச் சின்னமே சங்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், குறித்த சின்னம் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் தமிழ் தேசியத்தின் மலர்ச்சியான பா. அரியநேத்திரன் திகழ்வதாக போராளிகள் நலன்புரி சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized