ஜனாதிபதி ரணில் முன்வைத்த யோசனை – பல மில்லியன் ரூபாவிற்கு கிடைத்துள்ள அனுமதி!

அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் 200,000 மெற்றிக் தொன் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு, 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் தானும் இணைந்து நேற்று முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பால் மாவின் விலை
அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள பால்மாவை கொள்வனவு செய்ய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ச.தொ.ச ஊடாக ஹைலண்ட் பால்மாவை விற்பனை செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஹைலண்ட் பால் மாவின் விலையும் கடந்த வாரம் முதல் 400 கிராம் பாக்கெட் ஒன்றின் விலை 75 ரூபாவாலும் 01 கிலோ பக்கற் ஒன்றின் விலை 190 ரூபாவாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாகும் சர்வதேசத்தின் கிடுக்குப்பிடி!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேசத்தின் அவதானம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாடுகள் பல ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது ஆதவினை வெளியிட்டு வருவதுடன், இந்தியா நேரடியாக களமிறங்கியுள்ளது.

தென்னிலங்கை அரசியல் இவ்வாறு சூடுபிடித்துள்ள நிலையில் மறுபக்கம் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என தமிழ் தேசியத்தின் சார்பில் பொதுவேட்பாளராக பா. அரியநேத்திரன் களம் இறங்கியுள்ள நிலையில், அரியநேத்திரன் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு வெளியாகியிருந்தது.

தமிழ் மக்களுக்கு முக்கிய கட்டமாக 2024 ஜனாதிபதி தேர்தல் காணப்படுவதாக அரசியல் தலைவர்கள் நாளாந்தம் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட அமைதியின்மையை சீர்குலைத்துள்ளது.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின், தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பிலும், ஜனாதிபதி தேர்தலில் சர்வதேசத்தின் பிரசன்னம் குறித்தும் தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய அவசர நிலைமையை எதிர்கொள்வதற்காக பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளை ஒருங்கிணைத்து ‘அவசரகாலத் திட்டத்தை’ தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார். அவசரகால நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவசர நிலையில் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை களமிறக்குவது மற்றும் இராணுவம் தனது அதிகாரங்களை அவசர காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் கீழ் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. அதற்கான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 18ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைகளின் தளபதிகள் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது. அவசரகால நிலைமையை கட்டுப்படுத்த அதிரடியாக களமிறக்கப்படும் அதிரடிப்படையினர்!

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய அவசர நிலைமையை எதிர்கொள்வதற்காக பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளை ஒருங்கிணைத்து ‘அவசரகாலத் திட்டத்தை’ தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.

அவசரகால நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அவசர நிலையில் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை களமிறக்குவது மற்றும் இராணுவம் தனது அதிகாரங்களை அவசர காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் கீழ் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

அதற்கான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 18ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைகளின் தளபதிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது.

அவசரகால நிலைமையை கட்டுப்படுத்த அதிரடியாக களமிறக்கப்படும் அதிரடிப்படையினர்!

Posted in Uncategorized

சஜித்தின் பிரசார கூட்டத்தில் பெரும் குழப்பம்!

கல்முனையில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரசார கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரின் அணியினர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது, நேற்று (14.09.2024) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

ரணில் – அநுர கும்பலின் சூழ்ச்சி: சஜித்தின் குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க ரணில் – அநுர கும்பல் இரவு பகல் பாராது சூழ்ச்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்துக்குச் செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலைமுடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்துக்கும் ரணில் – அநுர கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.

ரணில் – அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்தச் சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

கட்டுக்கட்டாக பைல்களைத் தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்சக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என வெளிக்கொணர்ந்தது.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்?

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

இந்தநிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதியானால் வட – கிழக்கிற்கு பொலிஸ், காணி அதிகாரம் இல்லை : பொன்சேகா தெரிவிப்பு!

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசீர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும்.

அதனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஐக்கியமான நாடு குறித்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை ஏற்க முடியாது.

13 வழங்கப்படும் எனச் சஜித் கூறுகின்றார். அதேபோல் ஐக்கியமான நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர்.

ஆனால், ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்.

ஆனால், 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் வரை மேற்படி அதிகாரங்களை வழங்க முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் அரசியல்வாதியை கைது செய்ய நடவடிக்கை!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படும் அமைச்சர் ஒருவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருந்த போதும், அவரின் கைது நடவடிக்கை, கடும் அழுத்தம் காரணமாக தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய அமைச்சர் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து, கைது செய்வதை தடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போதிய ஆதாரங்கள்
விசாரணையின் போது கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு சட்டத்தை ஏமாற்றிய போதிலும் கைது செய்யப்பட்டு 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் சத்தியபிரமாணம்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜனாப் ஃபயாஸ் ரசாக்கும் பிரதம நீதிவான் நீதிமன்ற நீதவானாக ஜீவராணி கருப்பையாவும் நேற்று சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

குறித்த சத்தியபிரமாணங்கள், நேற்று (13.09.2024) மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா 12.09.2024 அன்று நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது.

பணியிடை நிறுத்தத்தின் பின்னணி

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புல்மோட்டை 3ம் வட்டாரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நடமாடியதால் 119 எனும் அவசர இலக்கத்திற்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். குறித்த சம்பவம் 04.09.2024 அன்று இரவு இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து புல்மோட்டை பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்ற வேளையில் அங்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றதில் வழக்குகள் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இருந்ததாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பதற்றமடைந்த நிலையில் மக்கள் அங்கு ஒன்று கூடியதால் பொலிஸார் பாதுகாப்புடன் குறித்த நீதிபதியை பின் பக்கத்தினால் வெளியேற்றி அனுப்பியதாக புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .

குறித்த சிவில் சமூகத்தை சேர்ந்த வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட பெண் ஒருவரின் வீட்டுக்கு நீதிபதி இரவு நேரத்தில் செல்ல முடியுமா என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் குறித்த நீதிபதியின் அரச வாகனமும், குறித்த பெண்ணின் வேலையாள் ஒருவரினால் செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வாகனத்தை பொலிஸார் மீட்டு குறித்த நீதிபதியிடம் பொலிஸார் ஒப்படைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

Posted in Uncategorized

விடுதலைப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் தமிழ் மக்கள் எடுத்த சிறந்த தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டுமென தமிழ் மக்கள் எடுத்த தீர்மானமானது 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்கு பின்பு எடுக்கப்பட்ட சிறந்த தீர்மானமென யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எமது இனம் ஒரு தலைமையின் கீழ் எழுச்சி பெற்றிருந்தது.

தமிழீழ விடுதலை புலி
உலகத்தின் எந்த தமிழினமாக இருப்பினும் ஒரு தலைவரின் கீழ் சுயமரியாதையுடன் இருந்தவர்கள், 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்கு பின்பு எங்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டது.

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டு ஒவ்வொரு கூறுகளாக பிரிக்கப்பட்டு கட்சியினுள்ளேயே பல மோதல் என்கின்ற அவலநிலையில் நாம் இருக்கும் சந்தர்ப்பத்தில் தமிழினத்தை ஒரு நிலையில் கொண்டு வருவதற்கு வாய்ப்பாக தமிழ் பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized