Hot News
Home » செய்திகள் » ஆறு பொலிஸாரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

ஆறு பொலிஸாரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் அலுவலகத்தைச் சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பொலிஸாரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளனர்.

பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் ஹுஸம்தீன் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டமை மற்றும் வேறு வழக்குகள் தொடர்பாக பிரதிபொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவருடைய அலுவலகத்தில் கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகள் அறுவரையும் வாக்குமூலமளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளனர்.

தொம்பே பகுதியில் வைத்து கடந்த 22ம் திகதி கடத்தப்பட்ட வர்த்தகர் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கொலைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

TELO Media Team 1