Hot News
Home » செய்திகள் » 13க்கு பதிலாக மாற்று யோசனை-அரசாங்கம் யோசிக்கிறது

13க்கு பதிலாக மாற்று யோசனை-அரசாங்கம் யோசிக்கிறது

13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பதிலாக மாற்று வழிகளை மேற்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் யோசித்து வருகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸக்கட்சிகள் 13வது சரத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே இந்த ஏற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏதிர்வரும் வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக இந்த திருத்தங்களை கொண்டு வருவதற்கு அவசரப்படும் நிலையிலேயே இந்த ஏற்பாட்டை அரசாங்கம் இந்த ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் இடம்பெயர்ந்தோரையும் இணைத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் இந்த வாரத்தில் அவசரமாக சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதன்மூலம் சிங்கள முஸ்லி;ம் வாக்குகளின் மூலம் வடக்குமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு அதிக ஆசனங்கள் கிடைப்பதை தடுத்து விடலாம் என்று அரசாங்கம் கருதுகிறது.

எனினும் நாடாளுமன்றத்தில் இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது போனால் வடக்கு மாகாணசபைத்தேர்தலை பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் பின்னர் நடத்துவதற்கான யோசனையையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது

TELO Media Team 1