Hot News
Home » செய்திகள் » வட மாகாண தேர்தல் குறித்து ரணில், மஹிந்தவிற்கு கடிதம்

வட மாகாண தேர்தல் குறித்து ரணில், மஹிந்தவிற்கு கடிதம்

வட மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்

வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடாத்த அரசாங்கம் தயாராவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அது ´வட மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பரில் இடம்பெறும்´ என்ற அரசாங்கத்தின் அறிவிப்பாகும்.

இதனையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோடு இது 2013 மார்ச் 21ம் திகதி நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையை நிறைவேற்றுவதாகும். இந்த பிரேரணையை செயற்படுத்தும் போது மனித உரிமை தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் 21வது சரத்தின்படி செயற்பட வேண்டும். அந்த சரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உலகளாவிய மற்றும் சம வாக்குரிமை அடிப்படையில் உண்மையான தேர்தலாகவும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அல்லது அதற்கு சமமான இலவச வாக்களிப்பு நடைமுறைகள் மூலம் அமைய வேண்டும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தில் 25வது சரத்துபடி இந்த அதிகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய மற்றும் சம வாக்குரிமை மூலம் வாக்களிக்க உரிமை இருக்க வேண்டும்இ இது உண்மையான தேர்தலாக இருக்க வேண்டும். இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது உத்தரவாதம்இ வாக்காளர்களின் விருப்பத்தை சுதந்திரமாக வெளிப்பாடுத்தும் தேர்தலாக இருக்க வேண்டும்.

தேர்தலின் போது அரச இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் பல பற்றி பாராளுமன்றில் நாம் முறையிட்டுள்ளோம்.

வடக்கில் இராணுவம் மற்றும் பிரதான கட்சி அரசியல்வாதிகளிடையே ஏற்படும் மோதல் இதனை உறுதி செய்கிறது. இதனால் வடக்கில் சுதந்திரமானஇ நீதியான தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது.

வடக்கு தேர்தலின் போது ஐநா மனித உரிமை சர்வதேச பிரகடனத்தை செயற்படுத்துமாறு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் கேட்டுக் கொள்கிறோம்.

வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் தீர்க்கப்படவேண்டிய நான்கு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

01. அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை ரத்து செய்து 17வது திருத்தத்தை செயற்படுத்தல்.

02. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைப்படி ´பொலிஸ் சேவை மற்றும் அனைத்து பொலிஸாரும் சுதந்திரமாக செயற்பட உயர் தொழில் தரத்தை நிலைநாட்ட ஆணைக்குழுவை பலப்படுத்தும் வழைகயில்  அதிகாரம் வழங்க வேண்டும்.

03. இராணுவ அதிகாரியான வடக்கு ஆளுநர் நீக்கப்பட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து கட்சிகளும் ஏற்கும் சிவில் நபர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

04. வேட்பு மனு தினம் தொடக்கம் முடிவு அறிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்கு அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் கண்காணிக்க பொதுநலவாய சபை கண்காணிப்பு குழுவை அழைத்தல்.

இவை குறித்து கலந்துரையாட எனது தலைமையில் விசேட குழுவிற்கு வாய்ப்பளித்தால் சிறந்தது.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி தலைவரினால் கடந்த புதன்கிழமை கடிதம் எழுதப்பட்டதாகவும் பதிலெதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

TELO Media Team 1