Hot News
Home » செய்திகள் » வெளியுறவுத்துறை அமைச்சின் பணிகளை ரணிலின் குழு கண்காணிக்கவுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சின் பணிகளை ரணிலின் குழு கண்காணிக்கவுள்ளது.

பிரதமந்திரி ரணில் விக்கிரமசி;ங்கவின் கீழ் வரும் சர்வதேச விவகார குழு வெளியுறவு அமைச்சின் பணிகளை கண்காணிக்கவுள்ளது.
இதன்போது வெளியுறவு கொள்கை உட்பட்ட விடயங்களில் அந்தக்குழு வழிக்காட்டல்களை மேற்கொள்ளும் என்று இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
திறைசேரியின் முன்னாள் செயலாளருமான பிரதமரின் ஆலோசகருமான சரித்த ரத்வத்தை இந்தக்குழுவின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர,பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம சாகல ரட்நாயக்க,லலித் ஏக்கநாயக்க உட்பட்டவர்களை நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்தித்து பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
இதன்போது புதிய அரசாங்கம் பதவியேற்று கடந்த ஒருவருடக்காலப்பகுதியில் வெளியுறவு அமைச்சர் பெரிதாக பணிகளை முன்னெடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள்ää உரியமுறையில் பணிகளை மேற்கொள்ளவில்லை.இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயமும் உள்ளடங்குகிறது.
இந்தநிலையில் வெளியுறவு அமைச்சின்கீழ் வரும் பொருளாதார துறை பிரிவுää அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

TELO Media Team 1