Hot News
Home » செய்திகள் » ஆயுத அகற்றல் நட்டம் தொடர்பில் முன்னாள் செயலாளருக்கு எதிராக மீண்டும் விசாரணை

ஆயுத அகற்றல் நட்டம் தொடர்பில் முன்னாள் செயலாளருக்கு எதிராக மீண்டும் விசாரணை

இறக்குமதி செய்யப்பட்ட வெடிப்பொருட்களில் காலாவதியானவற்றை அகற்றும் செயற்பாட்டின் போது ஏற்பட்ட சுமார் 2 பில்லியன் ரூபா நட்டத்துடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜெயரட்ன மீதே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது
பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணையை நடத்தவுள்ளது.
இந்த ஆயுத அகற்றல் செயற்பாட்டின்போது உரிய ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது உள்துறை அமைச்சின் செயலாளராக பதவிவகிக்கும் அவர் நியூஸிலாந்து தப்பிச்சென்று அங்கு வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TELO Media Team 1