Hot News
Home » செய்திகள் » இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம்

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் முதலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முழுமையான இணக்கம் இதுவரை எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இன்று மாலை இடம்பெறவுள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.

முன்னதாக இன்று முற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

இதன்போது, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை குறித்து, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. அரசியல்யாப்பு வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து இந்த மாதம் 30ஆம், 31 ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.