Hot News
Home » கட்டுரைகள் » விம­லுக்கும் கமா­லுக்கும் அஞ்­சப்­போ­வ­தில்லை

விம­லுக்கும் கமா­லுக்கும் அஞ்­சப்­போ­வ­தில்லை

விமல் வீர­வன்­ச­வுக்கும் கமால் குண­ரட்­ன­வுக்கும் நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை. தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பை நாங்கள் கொண்­டு­வந்தே தீருவோம். கமால் குண­ரட்­ன­வி­னதும் விமல் வீர­வன்­ச­வி­னதும் அச்­சு­றுத்­த­லுக்கு நாங்கள் ஒரு­போதும் பயப்­ப­ட­மாட்டோம் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

தற்­போ­தைய வழி­ந­டத்தல் குழு­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கையில் காணப்­ப­டு­கின்ற ஒரு­மித்த நாடு என்ற பதத்­திற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. மாறாக ஜனா­தி­பதி முறைமை அவ்­வாறே இருக்­க­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்றும் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­வர்­களை கொல்­ல­வேண்டும் என இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­துள்­ளமை தொடர்­பிலும் பாரா­ளு­மன்­றத்­திற்கு குண்­டு­வைக்­கப்­படும் என முன்னாள் அமைச்சர் தெரி­வித்­துள்­ளமை தொடர்­பா­கவும் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்; தற்­போது இடைக்­கால அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள ஒரு­மித்த நாடு என்ற பதத்­திற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி எதிர்ப்பு வெளி­யி­ட­வில்லை. ஆனால் ஒரு சில­வி­ட­யங்­களில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

அதா­வது தேர்தல் முறை மாற்­றப்­ப­ட­வேண்டும். அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­ப­ட­வேண்டும். அதே­நேரம் ஜனா­தி­பதி முறை­மை­யா­னது மாற்­றப்­ப­டக்­கூ­டாது. ஜனா­தி­பதி முறைமை நீடிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இது­தொ­டர்பில் எமது கட்சி மிகவும் தெளி­வா­கவும் உறு­தி­யா­கவும் இருக்­கின்­றது.

எம்மைப் பொறுத்­த­வ­ரையில் அர­சியல் மற்றும் மொழி அபி­வி­ருத்தி உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் தமிழ் மக்­க­ளுக்கு அநீதி காணப்­ப­டு­கின்­றது. எனவே அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது திருத்த சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்­பது எமது நோக்­க­மாகும். நாம் அதற்­கா­கவே குரல் கொடுக்­கின்றோம். எவ்­வா­றெ­னினும் தற்­போ­தைய இறுதி சந்­தர்ப்­பத்தில் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் கண்­டு­வி­ட­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

இதே­வேளை பாரா­ளு­மன்­றத்தின் மீது குண்டு வீசு­வ­தாக விமல் வீர­வன்­சவும், அர­சி­ய­ல­மைப்பை ஆத­ரிப்­ப­வர்­களை கொல்­ல­வேண்டும் என்று இரா­ணுவ அதி­காரி கமால் குண­ரட்­னவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள். கமால் குண­ரட்­ன­வுக்கும் விமல் வீர­வன்­ச­வுக்கும் ஒன்றைக் கூற விரும்­பு­கின்றோம். அதா­வது இவர்கள் இருக்கும் அஞ்சி அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை நாங்கள் பின்­னோக்கி செல்ல மாட்டோம்.

இவர்கள் இரு­வ­ருக்கும் அச்­ச­ம­டைந்து அர­சி­ய­ல­மைப்பை உருவாக்கும் செயற்பாடுகளை நிறுத்தமாட்டோம். நாங்கள் அரசியலமைப்பை உருவாக்கியே தீருவோம். கமல் குணரட்னவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் பயந்து புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாடுகளை நிறுத்திவிடுவோம் என யாரும் எதிர்பார்க்க முடியாது. நாம் அரசியலமைப்பை கொண்டுவந்தே தீருவோம் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கின்றோம் என்றார்.

TELO Media Team 1