Hot News
Home » நேர்கானல்கள் » தமிழரசு தவறை திருத்தினால் அரவணைத்துச் செல்லத் தயார்

தமிழரசு தவறை திருத்தினால் அரவணைத்துச் செல்லத் தயார்

இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி தவ­று­களை களைந்து மக்கள் நலன்­சார்ந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் விடு­தலை சார்ந்தும் செயற்­ப­டு­வ­தற்­காக எம்­முடன் இணை­வார்­க­ளாயின் அர­வ­ணைத்து செயற்­பட நாம் தய­ாரா­கவே உள்ளோம். அத்­துடன் எமது புதிய கூட்­டணி ஜன­நா­யகக் கட்­ட­மைப்­புக்­கு­ரிய மாற்று அணிக்­கான அடித்­த­ள­மொன்றை இட்­டுள்­ள­தா­கவும் தமிழ்த்­தே­சிய விடு­தலைக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் வீரகேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

கேள்வி:- கொள்­கை­யி­லி­ருந்து தமி­ழ­ர­சுக்­கட்சி வில கிச் செயற்­ப­டு­வ­தாக கூறி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளியே­றிய ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் இணைந்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- சர்வ அதி­காரம் படைத்த முன்னாள் ஜனா­தி­ப­தியை வீழ்த்தி நாட்டில் ஜன­நா­ய­கத்தை தாபிப்­ப­தற்கு கட்சி பேத­மின்றி முழு­நாடும் ஒன்­றி­ணைந்­தது. அர­சியல் கட்­சி­க­ளுடன் மனி­த­வு­ரிமை அமைப்­பு­களும், சமூக ஆர்­வ­லர்­களும், தொழிற்­சங்­கங்­களும், ஏரா­ள­மான பொது அமைப்­பு­களும் கைகோர்த்து செயற்­பட்­டதை இந்த நாடு அறியும். அதைப் போன்றே தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வுடன் உரு­வான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மக்கள் வழங்­கிய ஆணையைக் கைவிட்டு அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிரலை ஏற்று செயற்­படும் ஒரு போக்கைக் கடைப்­பி­டித்­த­பொ­ழுது அவர்­க­ளுடன் தொடர்ந்தும் பய­ணிக்க முடி­யாத ஒரு சூழல் ஏற்­பட்­டது. அதனைத் திருத்தி சரி­யான பாதையில் செலுத்­து­வ­தற்­காக மேற்­கொண்ட முயற்­சிகள் அனைத்தும் பல­னளிக்­க­வில்லை. ஆகவே, எமது மக்கள் கொடுத்த ஆணையை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் பரந்­து­பட்ட தமிழ் அமைப்­புக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஒரு மாற்று அணி­யை உரு­வாக்க வேண்­டிய தேவை ஏற்பட்­டது. இதற்­காக நாம் பல­த­ரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தினோம். வடக்­கு, -­கி­ழக்கில் உள்ள எட்டு மாவட்­டங்­களில் நாங்கள் உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­பட்­டது.

இதற்கு சகல மக்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய எல்­லோ­ருக்கும் தெரிந்த பரீட்­ச­ய­மான சின்­ன­மாக தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் உத­ய­சூ­ரியன் சின்­னமே இருந்­தது. தந்தை செல்வா மற்றும் ஜி.ஜி. பொன்­னம்­பலம் போன்­ற­வர்­களால் உரு­வாக்­கப்­பட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முத­லா­வது தேர்­த­லிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு சின்­ன­மாக உதயசூரியன் இருந்­தது. எம்­முடன் இணைந்து பய­ணிக்கும் அனைத்து கட்­சி­களும் அமைப்­பு­களும் அதனை ஏக­ம­ன­தாக அங்­கீ­க­ரித்­தன. ஆனந்தசங்­கரி அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி அவரும் அதனை ஒரு பொதுச்­சின்­ன­மாக ஏற்­றுக்­கொள்­வ­தற்கும் அது தொடர்­பான ஒரு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை அங்­கீ­க­ரித்து ஏற்­றுக்­கொள்­வ­தற்கும் தயா­ராக இருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஸ்தாபகக் கட்­சி­களில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும் ஒன்று. 2012ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களில் கிளி­நொச்­சியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­போது கூட்­ட­மைப்பில் மீண்டும் இணைந்­து­கொண்ட தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் சின்­னத்­தி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போட்­டி­யிட்டு இரண்டு பிர­தேச சபை­க­ளையும் கைப்­பற்­றி­யது. அந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மானத்தைக் காப்­பாற்­றி­யதும் உத­ய­சூ­ரியன் சின்­னம்தான்.

தமி­ழர்­களின் உரி­மை­களைப் பெறு­வ­தற்­கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்­யப்­பட்­டதன் பின்னர், எமது தேசிய இனப் பிரச்­சி­னையை முன்­னெ­டுத்துச் செல்ல வேண்­டிய முழுப்­பொ­றுப்பும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தோள்­களில் வந்­தி­றங்­கி­யது. இதனை நிறை­வேற்­று­வ­தற்கு அனைத்து தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் ஓர­ணியில் திரட்ட வேண்­டிய தேவையை நாம் உணர்ந்­ததன் விளைவே ஆனந்தசங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும், சித்­தார்த்தன் தலை­மை­யி­லான புளொட்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணை­வ­தற்கு பிர­தான கார­ண­மாக இருந்­தது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்­டதன் பின்னர், நடை­பெற்ற அனைத்துத் தேர்­தல்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு மக்கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்­று­வதை தற்­போ­தைய தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ கட்­சி­களும் அமைப்­பு­களும் ஏற்­றுக்­கொண்­டதன் பேரில், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் சின்­ன­மான உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் போட்­டி­யிட முடிவு செய்­யப்­பட்­டது.

கேள்வி:- தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யையும் இணைந்த கட்­ட­மைப்பை உரு­வாக்க முடி­யாது போனதேன்?

பதில்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் ஒரு பரந்­து­பட்ட வலு­வான கூட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பாக பல­சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தி­யி­ருந்தோம். பேச்­சு­வார்த்­தை­களில் முன்­னேற்றம் இருந்­தா­லும்­கூட, தேர்தல் அறி­விக்­கும்­வ­ரை­யிலும் எங்­க­ளது பேச்­சு­வார்த்தை தொடர்ந்த வண்­ணமே இருந்­தது. இதன் கார­ண­மாக எம்மால் ஒரு பொதுச் சின்­னத்தைத் தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. ஏனையோர் அனை­வரும் ஏற்­றுக்­கொண்ட பொதுச்­சின்­னத்தை தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யி­னாலோ அல்­லது தமிழ்க் காங்­கி­ர­ஸி­னாலோ ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. இத்­த­கைய கார­ணங்­களால் நாம் உரு­வாக்­கிய தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பில் அவர்­களால் இணைந்­து­கொள்­ளவும் முடி­ய­வில்லை. குறைந்­த­பட்சம் ஒரு போட்டித் தவிர்ப்பு ஒப்­பந்­தத்­தை­யா­வது மேற்­கொள்ள நாம் முயற்சி செய்தோம். ஆனால் அத­னையும் ஏற்­ப­தற்கு அவர்கள் தயா­ராக இருக்­க­வில்லை.

கேள்வி:- சிறு தேர்­த­லாக கரு­தப்­படும் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் கூட கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான பல­மான மாற்று அணி­யொன்றை உரு­வாக்க முடி­யாது போயுள்­ள­மையை எவ்­வாறு பார்­க்கின்­றீர்கள்?

பதில்:- ஒரு பரந்­து­பட்ட ஐக்­கிய முன்­ன­ணியை உரு­வாக்­கு­வது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. பல்­வே­று­பட்ட கருத்­துக்­களை உடைய சக்­தி­களை ஒரு பொது­வான கொள்­கை­யின்­ கீழும் அதனை ஒட்­டிய குறைந்­த­பட்ச வேலைத்­திட்­டத்­தின் ­கீழும் இணைப்­ப­தென்­பது சாதா­ரண விட­ய­மல்ல. ஒரு கட்­சிக்­குள்­ளேயே பல்­வேறு கருத்து வேறு­பா­டுகள் நிலவும் சூழலில், பல அமைப்­புக்­களை இணைத்து ஒரு மாற்று அணிக்­கான அடித்­த­ளத்தை நாம் இட்­டுள்ளோம். தற்­போது தோன்­றி­யுள்ள மாற்று அணி முழு­மை­யான அர­சியல் கட்­சி­களை ஒன்­றாக அணி­ தி­ரட்­டா­த­போதும், எதிர்­கா­லத்தில் அவர்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­கான அடித்­த­ளத்தை நாம் இட்­டி­ருக்­கிறோம்.

ஐக்­கியம் என்ற பெயரில் சர்­வா­தி­காரப் போக்­குடன் செயற்­பட்டு கொள்­கை­களைக் கைவிட்டு தமி­ழ­ரசுக் கட்­சியை பலப்­ப­டுத்­து­வதை மட்­டுமே நோக்­க­மாகக் கொண்ட அந்தக் கட்­சியின் எதேச்­சா­தி­காரத் தன்­மை­யி­லி­ருந்து அர­சியல் தலை­மை­களை மீட்­டெ­டுத்து ஒரு ஜன­நா­யகப் பாதையில் தெளிவான கொள்­கை­யுடன் முன்­னே­று­வ­தற்கு நாம் அடித்­த­ள­மிட்­டுள்ளோம்.

கேள்வி:- உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­மைப்­பாக கள­மி­றங்­கி­யுள்ள உங்கள் தரப்பின் பிர­தான இலக்கு அல்­லது தொனிப்­பொருள் என்ன?

பதில்:- வடக்­கு–-­கி­ழக்கில் இடம்­பெற்ற பாரிய யுத்­தத்தின் விளை­வாக கிரா­மிய நகர கட்­ட­மைப்­புக்கள் அனைத்தும் அழி­வுக்­குள்­ளா­கின. சகலவித­மான அபி­வி­ருத்­தி­களும் முடக்­கப்­பட்­டன. அது மட்­டு­மன்றி, மிக நீண்­ட­கா­ல­மாக பொரு­ளா­தாரத் தடை விதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மா­கவும் அவை இருந்­தன. யுத்தம் முடி­வுற்­றதன் பின்­ன­ரும்­கூட இதனை மீளக்கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான எந்­த­வி­த­மான திட்­ட­மி­டல்­களும் அரச தரப்­பி­லி­ருந்து ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கடந்த உள்­ராட்சி சபைத்தேர்­தல்­களில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­கி­ய­துடன், வடக்­கு-­, கி­ழக்கின் மிகப் பெரும்­பா­லான சபைகள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வசமே இருந்­தது. இதற்கு நிய­மிக்­கப்­பட்ட தவி­சா­ளர்­களில் பெரு­ம­ள­வி­லா­ன­வர்கள் தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவே இருந்­தனர். இச்­ச­பை­களின் பெரு­ம­ள­வி­லான தவி­சா­ளர்கள் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர். இதனை நாம் சுட்­டிக்­காட்­டி­ய­போதும், எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­காமல், தொடர்ந்தும் ஊழல் நடைபெறுவ­தற்கு தமி­ழ­ரசுக் கட்சி துணை­போ­யி­ருந்­தது.

அர­சியல் மற்றும் அபி­வி­ருத்தி விட­யங்­களைக் கணக்கில் கொண்டு ஊழ­லற்ற வினைத்­திறன் மிக்க, தன்­னி­றைவு பெற்ற கிரா­மங்­களை உரு­வாக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்டு நீடித்­தி­­ருக்கும் அபி­வி­ருத்தி மற்றும் நிலை­யான அர­சியல் தீர்வு என்னும் தொனிப்­பொ­ருளில் நாம் இம்­முறை உள்ளூ­ராட்சித் தேர்­தல்­களை முகங்­கொ­டுக்­கிறோம்.

கேள்வி:- தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப். ஆரம்­பித்­துள்ள பய­ணத்­துக்கு மக்கள் அங்­கீ­காரம் அளிப்­பார்கள் என்ற நம்­பிக்கை உள்­ளதா?

பதில்:- நாங்கள் மாற்று அணி ஒன்றை அறி­வித்த உட­னேயே தமி­ழ­ரசுக் கட்சி அச்சம் கொள்ளத் தொடங்­கி­விட்­டது. தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் நாங்கள் இயங்கத் தொடங்­கி­ய­வுடன், தமிழ் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு என்ற பெயரை முடக்­கும்­படி தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யுள்­ளனர். தேர்தல் ஆணை­யா­ளரும் அது தொடர்பில் எம்­முடன் பேசினார். அந்தப் பெயரை தற்­கா­லி­க­மாகக் கைவி­டும்­படி கோரினார். நாங்கள் அதனை மறு­த­லித்து எந்தச் சட்­டத்­தின்கீழ் இத்­த­கைய கோரிக்­கையை விடுக்­கி­றீர்கள் என்று கேட்­டது மட்­டு­மன்றி, அவ்­வாறு ஏதா­வது தேர்தல் சட்­டங்கள் இருப்பின் எமக்கு எழுத்து மூலம் அறி­விக்­கும்­படி கோரினோம். இது­வரை தேர்­தல்கள் ஆணை­யகத்­தி­ட­மி­ருந்து இந்த விடயம் தொடர்பில் எத்­த­கைய எழுத்­து­மூல அறி­வித்­தலும் கிடைக்­க­வில்லை.

தமி­ழ­ரசுக் கட்­சியின் வேண்­டு­த­லின்­பே­ரில்தான் தேர்தல் ஆணை­ய­கமும் இவ்­வாறு செயற்­பட முனைந்­தது. தமி­ழ­ரசுக் கட்சி எம்மைக்கண்டு அஞ்­சு­வ­தற்கு இது ஒன்றே தக்க சான்­றாகும். நாம் கொள்கை சார்ந்து தொடுக்கும் வினாக்­க­ளுக்கும் தெரி­விக்கும் கருத்­துக்­க­ளுக்கும் பதி­ல­ளிக்­காமல் தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் ஏதேதோ பேசி விட­யத்தை திசை திருப்­பு­கின்­றனர். இதுவும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தோல்வி அச்­சத்தின் வெளிப்­பாடே.

அது­மட்­டு­மன்றி, தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் மக்கள் கொடுத்த ஆணையை கைவிட்டு அர­சாங்க நிகழ்ச்சி நிர­லுக்குள் செயற்­ப­டு­கின்­றனர் என்­பதும் மக்கள் மத்­தியில் பாரிய விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இடைக்­கால அறிக்கை தொடர்­பா­கவும் இல்­லா­த­வற்றை உள்­ளது என்று மக்­களை ஏமாற்றும் முயற்­சியும் மக்கள் மத்­தியில் தமி­ழ­ரசுக் கட்­சியின் மீது நம்­பிக்­கை­யின்­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கொழும்பில் ஒரு கதை­யையும் யாழ்ப்­பா­ணத்தில் வேறொரு கதை­யையும் பேசி உளுத்­துப்­போன பாரம்­ப­ரிய அர­சி­யலை தொடரும் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரை தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கத் தொடங்­கி­யுள்­ளனர். இத்­த­கைய ஒரு சூழலில், ஒரு மாற்று அணியின் தேவை மக்­களால் உண­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. இத னை அனை­வரும் உணர்ந்­ததன் விளை­வா­கத்தான் தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பும் உத­ய­மா­னது. இது மக்­களின் தேவையைக் கருதி மக்­களால் உரு­வாக்­கப்­பட்ட அமைப்­பாகும். வடக்­கு, -­கி­ழக்கில் அவர்கள் பாரிய வெற்­றியை ஈட்­டு­வார்கள் என்­பது பட்­ட­வர்த்­த­ன­மான உண்மை.

கேள்வி:- தமிழ் மக்கள் பேர­வையின் செயற்­பா­டு­களில் தொடர்ந்தும் பங்குபற்­று­வீர்­களா?

பதில்:- கூட்­ட­மைப்பின் பெயரைப் பயன்­ப­டுத்தி தமி­ழ­ரசுக் கட்சி தமிழ் மக்­களின் நலன்­க­ளி­லி­ருந்து விலகிச் சென்­று­விட்­டதன் கார­ண­மா­கவே அந்தக் கட்­சிக்கும் அர­சாங்­கத்­திற்கும் சர்­வ­தே­சத்­திற்கும் தமிழ் மக்களின் அபி­லா­ஷை­களை உரத்துத் தெரி­விப்­பதை நோக்­க­மாகக் கொண்டே தமிழ் மக்கள் பேரவை உத­ய­மா­னது. தமிழ் மக்கள் பேரவை என்­பது கட்சி அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்­டது. தமிழ்த் தேசிய இனத்தின் உரி­மை­களை வென்­றெ­டுக்­கும்­வரை தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்­புக்கள் செயற்­ப­ட­வேண்­டிய தேவை உள்­ளது. அத்­த­கைய அமைப்­புக்கள் செயற்­ப­டும்­வரை அத்­த­கைய அமைப்­புக்­களில் எமது பங்­க­ளிப்பும் இருக்கும்.

கேள்வி:- முறை­யான கட்­ட­மைப்­பினைக் கொண்ட அர­சியல் கூட்­ட­மைப்­பினை உரு­வாக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யாக தாங்கள் இருக்­கின்­ற­போதும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தற்­போ­தைக்கு மாற்­றுத்­த­லைமை அவ­சி­ய­மில்லை என்­கின்­றாரே?

பதில்:- இது முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் கேட்க வேண்­டிய கேள்வி என நான் கரு­து­கிறேன். இருந்­த­பொ­ழு­திலும், எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் மாற்றுத் தலைமை தேவை என்­பதை மக்கள் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். தமி­ழ­ரசுக் கட்­சியின் தவ­றான கொள்­கையே ஒரு மாற்றுத் தலை­மையின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­கி­றது. ஆகவே, தமிழ் மக்­க­ளுக்கு நீதி­யான நியா­ய­மான தீர்வு எட்­டப்­ப­ட­வேண்­டு­மாயின் மாற்றுத் தலைமை ஒன்றின் தேவை அவ­சியம் என்­பதை கௌரவ முத­ல­மைச்­சரும் ஏற்­றுக்­கொள்வார் என்று கரு­து­கிறேன்.

கேள்வி:- எதிர்­கா­லத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யையும் இணைத்துச் செயற்­ப­டு­வதில் முனைப்பு காட்­டு­வீர்­களா?

பதில்:- நாம் ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க விளைகின்றோம். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு எம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதில் ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஓரணியில் திரளக்கூடிய அனைவரையும் இணைத்துக்கொண்டு நாம் செயற்படுவோம்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் இணைந்து கொள்வது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது?

பதில்:- தமிழரசுக் கட்சிக்கும் எமக்கும் இடையில் தனிப்பட்ட கோபதாபங்கள் ஏதும் இல்லை. ஆனால் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி எதேச்சதிகாரமாகச் செயற்பட்டு மக்களின் நலனிலிருந்து விலகிச் சென்றமையும் மக்கள் வழங்கிய ஆணையை மறந்து கொள்கைகளைக் கைவிட்டு அடிப்படைக் கோரிக்கைகளிலேயே சமசரம் செய்துகொண்டதாலும் நாங்கள் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியுடன் பயணிக்க முடியாத சூழல் உருவானது. இந்தத் தவறுகளை களைந்து மக்கள் நலன்சார்ந்து தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை சார்ந்து செயற்படுவதற்காக எம்முடன் இணைவார்களாயின் அரவணைத்து செயற்பட நாம் தயராகவே உள்ளோம்.

கேள்வி:- உள்ளூராட்சிமன்றங்களில் உங்களின் தரப்பு பெரும்பான்மையை பெறமுடியாது போனால் இணைந்து நிர்வாகத்தினை ஏற்படுத்துவதற்கு முனைவீர்களா? அவ்வாறு இணைவதாயின் எந்த அடிப்படையில் யாருடன் இணைய முற்படுவீர்கள்?

பதில்:- தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் இந்த விடயம் தொடர்பில் நாம் சரியான முடிவுகளை மேற் கொள்வோம்.

நேர்காணல்: ஆர்.ராம்

TELO Media Team 1