எமது சின்னத்தை மாற்றி, போலி வாக்குச் சீட்டுகள் ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல்சட்ட விதிமுறை மீறல். இது தொடர்பில் கிளிநொச்சி உதவி தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளோம்’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜை தொடர்பு கொண்டு வினவிய போது, ‘குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது, மாதிரி வாக்குச் சீட்டுக்கள் அச்சிட்டு வெளியிடுவது, தேர்தல் சட்டத்துக்கு முரணானது. இது தொடர்பில் விசாரித்து வருகின்றோம்’ என தெரிவித்தார்.