Hot News
Home » செய்திகள் » மன்னார் மாவட்டத்தில் `மரணித்தவர்களை மலரச் செய்வோம்` நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் `மரணித்தவர்களை மலரச் செய்வோம்` நிகழ்வு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் வீரமரணமடைந்த மூத்த போராளிகளை நினைவு கூறுமுகமாக மன்னார் மாவட்டத்தில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படன.

கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலில் மே, 9, 1985ஆம் ஆண்டு வீரமரணமடைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மிசோ (ஞானேஸ்வரன்), ரவி ( S . செல்வலிங்கம் ), க. பவன் (ரவீந்திர நாதன்), ஜெராட் (அன்ரன் ஜீவரத்தினம்), குமார் (செட்டிகுளம் வவுனியா), வீனஸ் (அன்ரன்), பரண் (இ .மனோகரன்), அஜந்தன் (வை .விக்னேஸ்வரன்), பாலசிங்கம் ஆகியோரை நினைவு கூறுமுகமாக `ரெலோ` சுவிஸ் கிளை கல்வி அமைப்பின் அனுசரணையில் ஞானம் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மன்னார் ரெலோ அலுவலகத்தில் கடந்த மாதம் 12ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ.த.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது ரெலோவின் கொள்கை பரப்புச்செயலாளர் நா.கணேசலிங்கம் (சொக்கன்) மன்னார் மாவட்ட ரெலோ இளைஞர் அணிச்செயலாளர் க. தயாகரன் மற்றும் ரெலோ முன்னாள் போராளிகள் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதற்கான உதவியைச் செய்த சுவிஸ் கிளை  ஞானம் அவர்களுக்கு
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்டம் தனது நன்றிகளை கூறிக்கொள்கிறது.