Hot News
Home » செய்திகள் » புலிகள் போலல்ல ஐ.எஸ். அமைப்பு

புலிகள் போலல்ல ஐ.எஸ். அமைப்பு

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை எதிர்க்கொண்டதை போன்று ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்க்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாம் புதிதாக சிந்திக்க வேண்டும் எனவும், எமக்கென சட்டங்கள் தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை பார்த்து ஐ.எஸ். பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கொள்ள முடியாது.

இது வரையில் நாம் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை எதிர்க்கொண்டிருந்தோம். அது இவ்வறான ஒரு வலைப்பின்னல் அல்ல. இந்த குழு முடிவுற்றது என்று எமது நடவடிக்கைகளை நாம் நிறுத்திவிட முடியாது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை எதிர்க்கொண்டது போன்று ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்க்கொள்ள முடியாது. நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். எமக்கென சட்டங்கள் தேவை.

சிலர் கூறுகின்றார்கள் தற்போதைய சட்டம் போதுமானது என்று. ஆனால் இப்பொழுது சட்டங்கள் போதுமானவை அல்ல. எத்தகைய பயங்கரவாதத்திற்கும் அனுசரனை வழங்குதல் குற்றச்செயலாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அத்துடன், புலனாய்வு பிரிவை மேலும் வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டும்” என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.