Hot News
Home » செய்திகள் » `ரெலோ` யாழ் மாவட்ட தலைமைப் பணிமனையில் வெலிக்கடைப் படுகொலை நினைவஞ்சலி

`ரெலோ` யாழ் மாவட்ட தலைமைப் பணிமனையில் வெலிக்கடைப் படுகொலை நினைவஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைமைப் பணிமனையில் கறுப்பு ஜூலை நாளில் மேற்கொள்ளப்பட்ட வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் இன்று (25) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சிரேஸ்ட சட்­டத்­த­ரணியுமான ந.ஸ்ரீகாந்தா, வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான விந்தன் கனகரட்னம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான சபா குகதாஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வஸ்டர் விமல்ராஜ், துணை மாவட்ட அமைப்பாளர் ஜெயரட்ணம் ஜெனார்த்தனன் மற்றும் ரெலோ உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1983 ஜூலை 25-27 வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் மற்றும் அனைத்துப் போராளிகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களையும் உயிர்நீத்த பொது மக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலிக்கப்பட்டது.