Hot News
Home » செய்திகள் » முல்லையில் வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 36வது ஆண்டு நினைவேந்தல்

முல்லையில் வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 36வது ஆண்டு நினைவேந்தல்

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொன்விழா மண்டபம், மத்திய கல்லூரி, புதுக்குடியிருப்பு, கடந்த சனிக்கிழமை (27) மாலை வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முல்லை மாவட்ட அமைப்பாளருமான ஆ.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் ஆகியோர் இந் நிகழ்வில் சிறப்புப் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சிரேஸ்ட சட்­டத்­த­ரணியுமான ந.ஸ்ரீகாந்தா, யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தன் ஜனா கருணாகரம், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான விந்தன் கனகரட்னம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான சபா குகதாஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் நா.கணேசலிங்கம் (சொக்கன்), தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேன் சுரேந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட ரெலோ முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1983 ஜூலை 25-27 வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் மற்றும் அனைத்துப் போராளிகளையும் பொது மக்களையும் நினைவு கூரும் நிகழ்வை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசிய வீரர்கள் தினமாக ஆண்டு தோரும் நினவேந்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.