Hot News
Home » செய்திகள் » தீர்வுத் திட்டத்தை பகிரங்கமாக அறிவிப்பவருக்கே கூட்டமைப்பு ஆதரவு

தீர்வுத் திட்டத்தை பகிரங்கமாக அறிவிப்பவருக்கே கூட்டமைப்பு ஆதரவு

எதிர்காலத்தில் தென் பகுதி அரசியல்வாதிகள் வழங்கும் எழுத்து மூலமான உத்தரவாதத்தையோ உறுதி மொழிகளை​யோ நம்பி ஏமாறுவதற்குத் தமிழ் மக்கள் இனியும் தயாராக இல்லையென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத்தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.


தென் பகுதி தலைவர்களின் எழுத்துமூல உத்தரவாதத்தை இனியும் ஏற்கமாட்டோம்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாடு

அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் அதேவேளை, அந்த வேட்பாளர் தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கும் தீர்வுத் திட்டத்தைப் பகிரங்கமாகச் சிங்கள மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் சிவஞானம் குறிப்பிட்டார். அதனை விடுத்துக் கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் செய்து ஏமாறுவதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லையென்றும் அவர் கூறினார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

“கடந்த காலத்தில் பல ஆவணங்கள் உள்ளன. எழுத்தில் தந்தாலும், தெற்கின் தலைவர்கள் இல்லை என்பதும், மாற்றுவதும் தான் அவர்களின் தொழில்.அவர்கள் எழுத்து மூலம் தருவதை, பகிரங்கமாகப் பேச வைப்பதே தற்போதைய தேவை. அவர்கள் இதைத் தான் செய்யப் போகின்றோம் எனச் சிங்கள மக்களுக்குச் சொல்ல வைக்க வேண்டும். அது தான் சாத்தியமானது. அதனைவிடுத்து மீண்டும் இந்தியாவின் முன்னிலையில் கைச்சாத்திட்டுப் பெற்றுக்ெகாள்ள வேண்டும் என்பதெல்லாம் அனுபவமற்ற பேச்சு “என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

மக்கள் உதிரிகளை நிராகரித்து ஒற்றுமையாக, கட்டமைப்பாக இருக்கக்கூடியது தமிழ் தேசிய கூட்டமைப்பு. கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்யாவிடின், உதிரிகளை அனுப்பினால், தமிழ் மக்கள் அழிந்து போகவேண்டும். ஆனால், தமிழ் மக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். கண்ணை மூடிக்கொண்டு யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தோற்றப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அனைத்து விடயங்களும் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த விடயங்களில் கட்சி முரண்பட்டால், கட்சியில் இருந்தும் வெளியேறத் தான் தயார் என்றும் அவர் கூறினார்.