Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களைத் தனித்தனியாக சந்திக்க நேரம் கோரும் `ரெலோ`

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களைத் தனித்தனியாக சந்திக்க நேரம் கோரும் `ரெலோ`

அண்மையில் வவுனியாவில் நடந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், வேட்பாளர்கள் அனைவரையும் தனித்தனி நேரில் சந்தித்து பேசுவதென முடிவு எட்டப்பட்டது. அதற்காக வேட்பாளர்களிடம் நேரம் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளார் சுரேந்திரன் குருசுவாமி எமக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, விஞ்ஞாபனங்கள் வெளியிட்ட பின்னர், அதனடிப்படையில் வேட்பாளர்களை சந்தித்து ரெலோவின் உயர் மட்ட குழுவொன்று பேச்சு நடத்துவதென்றும்,

தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வு, அடிப்படை மற்றும் அன்றாட பிரச்சனைகளில் சாத்தியமான தீர்வை முன்வைக்கும் தரப்பை ஆதரிப்பதென்றும்,

அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக, தமிழர் தரப்பின் கோரிக்கைகளை ஒவ்வொரு வேட்பாளர்களிற்கும் வழங்குவதென்றும், இந்த நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடனும் பேசுவதென்றும்

இந்த விவகாரத்தில், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் எழுத்து மூல உத்தரவாதத்தை கோருவதென்றும், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளையும் இந்த நிலைப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிப்பதென்றும் கடந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில் முடிவுகள் எட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.